9 பேர் உயிரிழந்த கோர விபத்துக்கு காரணம் இதானா? டான்ஸ் ஆடிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர் - ஷாக் வீடியோ!
திருவனந்தபுரம்: கடந்த 5ஆம் தேதி கேரளாவிலிருந்து உதகைக்கு பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுற்றுலா பேருந்தை அதிக வேகத்தில் இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அதன் ஓட்டுநர் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஓட்டுநர் இதற்கு முன்னர் ஓட்டிய பேருந்தில் செய்த பொறுப்பற்ற செயல்கள் வீடியோவாக வெளிவந்துள்ளது.

விபத்து
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பள்ளியிலிருந்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தையடுத்து பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஓட்டுநர் ஜோமோன் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.

விசாரணை
ஆனால் தான் ஆசிரியர் என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோமோன் திடீரென தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் சென்ற அரசு பேருந்து திடீரென நின்றதால்தான் சுற்றுலாப் பேருந்து அதன் மீது மோதியதாக ஜோமோன் குற்றம் சாடினார்.

குற்றச்சாட்டு
அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் விசாரிக்கையில் சுற்றுலா பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனத்தில் உள்ள வேக கட்டுப்பாட்டு கருவியையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் விபத்து குறித்து அறிக்கை அளிக்க மாநில போக்குவரத்து அமைச்சகம் போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

வீடியோ
இதன்படி போக்குவரத்து ஆணையரால் கொடுக்கப்பட்ட அறிக்கையில், சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், ஓட்டுநர் ஜோமோன் வேறு பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கையில் அவர் செய்த பொறுப்பற்ற செயல்கள் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளன. அவர் ஓட்டுநர் இருக்கையிலிருந்து எழுந்து DJ பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது கேரளா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications