கேரளாவில் பாஜகவுக்கு ஜீரோ தான்.. மொத்தமாக சுருட்டும் இந்தியா கூட்டணி.. பரபர சர்வே முடிவுகள்
திருவனந்தபுரம்: வரும் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு கேரளாவில் ஏமாற்றமே மிஞ்சும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்ச்பா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையாக ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

தேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன. நாடு முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பரபரபக்க ஆரம்பித்துவிட்டன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் மொத்தம் உள்ள 20 லோக்சபா தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை வெற்றி பெறாத பாஜக.. இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வியூகம் வகுத்து வருகிறது.
ஆனால், ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பின் படி பாஜகவுக்கு கேரளாவில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சும் எனக்கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 45 சதவிகிதம் இடதுசாரிகள் கட்சிக்கு 31 சதவிகிதமும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 20 சதவிகிதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். 4 சதவிகித வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு:
கேரளாவில் மொத்த தொகுதிகள்: 20
இந்தியா கூட்டணி (காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்) - 20
பாஜக - 0
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications