என்னை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோவை நடிகர் திலீப் பார்த்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் பார்த்ததாக அவரது நண்பர் வெளியிட்ட தகவலை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மலையாள நடிகர் திலீப்
பாதிக்கப்பட்ட நடிகை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று அவர் விடுதலையான நிலையில் இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் பரபரப்பு
நடிகர் திலீப்புக்கு ஆதரவாக கேரள நடிகர் சங்கம் செயல்படுவதாக கூறி ஏராளமான பெண் நடிகைகள் அந்த சங்கத்தில் இருந்து விலகி ஓடி பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் இதையடுத்து இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் மலையாள இயக்குனரான பாலச்சந்திரன்.

பாலியல் வன்கொடுமை வீடியோ
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனரான பாலச்சந்திரன், நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை குற்றவாளிகள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அந்த காட்சிகளை மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இந்த வீடியோ முக்கிய பிரபலங்கள் பலருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும் எனவும் அவர் கூறியிருந்தார்.

பினராயி விஜயனிடம் புகார்
நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டு வருவதாக கூறிய விவகாரம் மலையாளத் திரையுலகில் மீண்டும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார். பாலியல் பலாத்கார காட்சிகளை நடிகர் திலீப் பார்த்ததாக அவரது நண்பர் கூறியுள்ளார் எனவும், எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications