Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து VS முஸ்லிம்.. மம்மூட்டிக்காக சபரிமலையில் மோகன்லால் பூஜை! சர்ச்சைக்கு தேவசம்போர்டு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் பரவியது. அதனை மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் குழு மறுத்தது. இதற்கிடையே புதிய படத்தில் தன்னுடன் நடிகர் நண்பர் மம்மூட்டிக்காக, நடிகர் மோகன்லால் சபரிமலைக்கு சென்று ‛உஷ பூஜை' செய்தார். இதற்கான ரசீது கசிந்தது. மம்மூட்டி முஸ்லிம் என்பதால் அவரது பெயரில் மோகன்லால் சபரிமலையில் பூஜை செய்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது விவாதமானது. இதுபற்றி மோகன்லால் விளக்கம் அளித்த நிலையில் தற்போது தேவசம் போர்டு புதிய தகவலை தெரிவித்துள்ளது.

mammootty mohanlal sabarimala

மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் சேர்ந்து நடிக்கின்றனர். திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். மேலும் நடிகர்கள் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நடிகைகள் நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. மம்மூட்டி, மோகன்லால், இயக்குநர் மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயர்களின் முதல் ஆங்கில எழுத்தான M என்பதை வைத்து ‛MMM' என்று இந்த திரைப்படம் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் மம்மூட்டி பங்கேற்றார். அதன்பிறகு அவர் பிரேக் எடுத்தார். அப்போது நடிகர் மம்மூட்டி கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார் என்ற தகவல் பரவியது. இது மம்மூட்டி ரசிகர்களை அதிர வைத்தது.

ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்தது. ‛‛மம்மூட்டி ரமலான் நோன்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இந்த பிரேக்கிற்கு பிறகு மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார். அவருக்கு எந்த உடல்நல பிரச்சனையும் இல்லை. தற்போது பரவும் தகவல் வதந்தி'' என படக்குழு தெரிவித்தது. இதனால் மம்மூட்டி ரசிகர், ரசிகைகள் நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையே கடந்த மார்ச் 18 ம் தேதி நடிகர் மோகன்லால் இருமூடி கட்டி சபரிமலை சென்று வந்தார். சபரிமலை ஐயப்பனை அவர் வணங்கினார்.அப்போது நடிகர் மம்மூட்டிக்காக அவர் ‛உஷா பூஜை' எனும் சிறப்பு பூஜையை செய்தார். இந்த பூஜைக்கு மோகன்லால் வாங்கிய ரசீது இணையதளங்களில் கசிந்தது. அதில் மம்மூட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்பதும், அவரது நட்சத்திரமான விசாகம் என்பதும் எழுதப்பட்டு இருந்தது. மம்மூட்டி இஸ்லாமியர். சபரிமலை ஐயப்பன் கோவில் இந்து கோவில். இதனால் இது சர்ச்சையை கிளப்பியது.

சிலர் மம்மூட்டி பெயரில் எப்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை செய்யலாம் என்று கேள்வி எழுப்பினர். அதேபோல் ‛‛மம்மூட்டி பெயரில் சபரிமலையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி இது தவறானது. இது கண்டிக்கத்தக்கது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை அல்லாவை மட்டும் ஏற்க வேண்டும். இதற்கு மம்மூட்டிக்கு தெரிந்து நடந்திருந்தால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேரளா பத்திரிகையாளரான அப்துல்லா தரப்பில் கூறப்பட்டது. இதனால் சர்ச்சை தொடர்ந்தது.

இதற்கிடையே தான் பிருத்திவிராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள ‛எம்புரான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து சென்னையில் நேற்று முன்தினம் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் மோகன்லால் சபரிமலை சர்ச்சை பற்றி பேசினார். அப்போது அவர், ‛‛பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட விஷயம். இதனை விவாதமாக மாற்றம் வேண்டாம். மக்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இது நல்ல விஷயம். சபரிமலை தேவசம் போர்டு ஒருவர் வழியாக மம்முட்டிக்காக காணிக்கை செலுத்திய ரசீது வெளியே கசிந்தது. மம்மூட்டி அனைவரும் பாதிக்கப்படுவது போல் லேசான உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இதில் கவலைப்பட வேண்டியது இல்லை'' என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக தான் மம்மூட்டிக்கு சபரிமலையில் செய்யப்பட்ட பூஜை தொடர்பான சர்ச்சை மற்றும் மோகன்லால் கருத்து தொடர்பாக சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தேவசம்போர்டு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், ‛‛பூஜைக்கான ரசீதின் ஒருபகுதி பக்தர்களுக்கு வழங்கப்படும். அதுதான் தற்போது வெளியே பரவி வருகிறது. கோவில் ஊழியர்களிடம் counter Foil மட்டுமே இருக்கும். இந்த விவகாரத்தில் தவறான புரிதலுடன் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார். அதனை அவர் திருத்தி கொள்வார் என்று நம்புகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ‛‛சபரிமலை என்பது அனைத்து மக்களுக்கானது. அனைத்து மதத்தினரும் வந்து பூஜை செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் சபரிமலை என்பது வாபர்சுவாமியின் சன்னதி இருக்கும் இடமாகும். இதனால் சர்ச்சை தேவையில்லாதது'' என்றார். அதாவது வாபர் இஸ்லாமியர் என்று கருதப்படுகிறார். சபரிமலை, வாபர் சன்னத்தில் அருகருகே உள்ளது. இதனால் மதபாகுபாடு காட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+