மூளையை தின்னும் அமீபா! கேரளாவில் மேலும் ஒருவர் பலி.. அதிகரிக்கும் அச்சம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
கேரளாவில் ஆகஸ்ட் மாதம் முதல், 'பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ்' எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோய் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 56 வயதான எம். ஷோபனா என்பவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மலப்புரம், வண்டூரைச் சேர்ந்த ஷோபனா, அவரது நிலை மோசமானதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 அன்று கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஷோபனா சுயநினைவின்றி இருந்துள்ளார். அவர் பயன்படுத்திய அனைத்து நீர் ஆதாரங்களும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபிக் என்செபாலிட்டிஸ் நோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி மற்றும் காசர்கோடைச் சேர்ந்த ஒரு நோயாளி ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர். மற்றவர்களும் கேரளாவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக, வயநாடு மாவட்டத்தின் பத்தேரியைச் சேர்ந்த 45 வயதான ரத்தீஷ் செப்டம்பர் 6 சனிக்கிழமையன்று உயிரிழந்தார். கேரளாவில், நாவிங்ளேரியா ஃபௌலேரி என்ற அமீபா, இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த அமீபா தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் காணப்படுகிறது. இது மூளை மற்றும் மூக்கைப் பிரிக்கும் தட்டு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிக்கிறது. இந்த அரிதான அமீபா சூடான நீரில் செழித்து வளர்கிறது. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக நீர்நிலைகளில் இதன் இருப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநில சுகாதாரத் துறை இந்த நோய் குறித்து விழிப்புணர்வையும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் பரப்புவதில் கவனம் செலுத்துகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications