திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது விளையாட்டுக்கு கிடைத்த கெளரவம்.. குரல் எழுப்புவேன்.. நெகிழ்ச்சியில் தடகள வீராங்கனை பிடி உஷா!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும், இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவமாகவே பார்க்கிறேன் என்று தடகள வீராங்கனை பிடி உஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்பி பதவி வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்பி-க்களாக நியமித்துள்ளார்.

யார் இந்த பிடி உஷா?

யார் இந்த பிடி உஷா?

அதில் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் அரையிறுதி சுற்றில் முதலிடம் பிடித்த பிடி உஷா, இறுதிப்போட்டியில் ஒரு நொடி பின்தங்கி பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும், ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அண்மையில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தடகளத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை, 1984ம் ஆண்டு பிடி உஷா படைக்கும் வாய்ப்பு சிறிய வித்தியாசத்தில் பறிபோனது. ஆனாலும் மனம் தளராமல் 1984ம் ஆண்டு 1986 சியோல் ஆசிய போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.

Recommended Video

    Ilaiyaraaja MP Post | இளையராஜாவுக்கு Rajya Sabha MP பதவி *India
    பிடி உஷா பெற்ற விருதுகள்

    பிடி உஷா பெற்ற விருதுகள்

    ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பிடி உஷா, கடந்த 2000 வது ஆண்டு ஓய்வை அறிவித்தார். மத்திய அரசின் அர்ஜுனா விருதையும், பத்மஸ்ரீ விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசிய விருது, சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை, சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் பிடி உஷா.

    பிடி உஷா கருத்து

    பிடி உஷா கருத்து

    இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு விளையாட்டு வீராங்கனை பிடி உஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மாநிலங்களவை எம்பி பதவி மகிழ்ச்சியளிக்கிறது. இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவமாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு பற்றி கருத்து

    மத்திய அரசு பற்றி கருத்து

    தொடர்ந்து பேசிய பிடி உஷா, மத்திய அரசு விளையாட்டு தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றை இளைஞர்களிடம் கொண்டு சென்று அவர்களை திறன் வாய்ந்தோராக மாற்ற வேண்டும். இந்த சூழலில், விளையாட்டுத் துறையில் உள்ள தனக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது சிறந்த வாய்ப்பு என்று கருதுகிறேன். விளையாட்டு தொடர்பான பிரச்னைகளை புரிந்துகொண்டு, அவற்றை சரி செய்வதற்கும் இது முக்கிய முடிவாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Athlete PT Usha has said that she will continue to raise her voice for sports in the Parliament and she sees this as an honor for sports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X