மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகார்.. கைதான பாபி செம்மனூருக்கு நீதிமன்றம் ஜாமீன்!
திருவனந்தபுரம்: மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகாரில், கேரளாவின் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மலையாள நடிகை நகை கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பாபி, தனது நகைகடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருமாறு நடிகையை அழைத்திருக்கிறார். ஆனால் நடிகை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது நடந்த சில நாட்கள் கழித்து நடிகையின் சோஷியல் மீடியா போஸ்ட்டுக்கு ஆபாசமான பதிவுகள் வந்திருக்கின்றன. தொடர்ந்து இந்த பிரச்சனை தீவிரமடைந்ததால், நடிகை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். மட்டுமல்லாது முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்தது. விரைவில் முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல சிலர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் இறுதியாக, பாபி செம்மனூர் எனும் நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார். இவரை தெரியாதவர்கள் கேரளாவில் குறைவு. கடந்த காலங்களில் சமூக அக்கறை கொண்ட நபராக தன்னை இவர் காட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
குறிப்பாக, நகைக்கடை திறப்பு விழாவுக்கு மாரடோனாவவை அழைத்து வந்திருந்தார். கேரளாவை பொறுத்தவரை கால்பந்துதான் எல்லாம். சச்சின் டெண்டுல்கரா? மரடோனாவா? என்று கேட்டால் மாரடோனா என்றுதான் மொத்த கேரளாவும் முழங்கும். இவ்வளவு வெறி கொண்ட ரசிகர்களுக்காக மாரடோனாவை கேரளாவுக்கு அழைத்து வந்திருந்தார் பாபி செம்மனூர். மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் இவருக்கு எதிராக பாலியல் புகார் பதிவான நிலையில் கேரளாவை தாண்டி, தேசிய அளவில் இது விவாதமாக வெடித்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 8ம் தேதி பாபியை கேரள போலீஸ் கைது செய்திருந்தது. அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75,67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை இரண்டும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி ஆபாசமான கருத்துக்களை வெளியிடுதலை தடை செய்தல் சட்டங்களாகும்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கேட்டு பாபி, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், "பாடி ஷேமிங் எனப்படும், உடல் அவமதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, உடல் பருமனோ இங்கு எல்லாம் ஒன்றுதான். எனவே மற்றவர்களை பற்றி கருத்து தெரிவிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல மனுதாரர் கூறிய கருத்துக்கள் இரட்டை அர்த்தம் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். மலையாளம் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த இரட்டை அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுத்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இனி இதேபோன்ற புகார் வந்தால் நிச்சயம் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications