தேன் கூடு, குருவி கூடு, குளவி கூடெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க! அதென்ன புத்தக கூடு.. வைரல் வீடியோ
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பெரம்குளத்தில் கிராமத்தினரே படிப்பதற்காக புத்தக கூடு ஒன்று வைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்பது பழமொழி. அதற்கேற்ப நம் வாழ்நாள் முடிவதற்குள் கணிசமான புத்தகங்களை படித்து முடித்துவிடலாம். புத்தகங்களை படிப்பதன் மூலம் மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் சிறிய கதை புத்தகங்கள் அடங்கிய நூலகம் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அது போல் கல்லூரிகளிலும் நூலகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள்
நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது போல் மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவிலான நூலகங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் புத்தக பிரியர்கள் வீடு முழுவதும் நூல்களை வைத்திருப்பார்கள். அது போல் அலுவலகங்களில் நூல்கள் இருக்கும்.

கல்லூரி படிப்பு
பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதோடு நல்ல பல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். வீடுகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், நூலகங்களில் புத்தகங்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.

கிராம புத்தகக் கூடு
ஆனால் திருவனந்தபுரத்தில் ஒரு கிராமத்தில் கிராம புத்தகக் கூடு எனும் ஒன்று உள்ளது. பெட்டிக் கடை வடிவில் காணப்படும் இந்த பெட்டியில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டு அவற்றை கிராம மக்கள் எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள்.

பெரும்குளத்தில் புத்தகக் கூடு
கேரளாவில் முதல் முறையாக பெரும்குளத்தில் இந்த புத்தகக் கூடு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை கேரளா சுற்றுலா துறை வெளியிட்டுள்ளது. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களில் நாட்டிலேயே முன்னணி இடத்தில் இருப்பது கேரளா ஆகும். ஒரு சாலையில் சிறிய ரேக் போன்ற cupboard உள்ளது. அதை திறக்கும் ஒருவர் அதிலிருந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார். இது பார்ப்பதற்கே அழகாக உள்ளது.

அதிகம் பகிரும் வீடியோ
அந்த புத்தக கூடுக்கு பக்கத்தில் ஒரு நீளமான இருக்கை உள்ளது. அந்த இருக்கையில் அமர்ந்து படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வைத்துவிட்டு செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கூட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி கல்வியறிவு தினம் கொண்டாடப்படுவதால் இந்த வீடியோ நேற்றைய தினம் அதிகம் பகிரப்பட்டது.

புத்தகக் கூடு
இது போல் மற்ற நகரங்களிலும் புத்தக கூடு வைத்து மக்களின் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கேரளாவை பொருத்தமட்டில் கல்வியறிவு சதவீதம் 96.2 ஆக உள்ளது. இவர்களில் 97.4 சதவீதம் ஆண்களும், 95.2 சதவீதம் பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். நல்ல முயற்சி என்றும் கல்விக்கு சிறந்த திட்டம் என்றும் பலர் சிலாகித்து வருகிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications