சிதம்பரம் சொல்லிட்டாரு.. ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக சிஏஏ ரத்து செய்யப்படுமாம்! பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்த உடன் முதல் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.

இந்த முறை நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடந்துவிட்டது.

CAA will be Repealed completely assets Congress P Chidambaram Amid Criticism By Pinarayi Vijayan

அடுத்த கட்டமாகப் பல மாநிலங்களுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் 20 எம்பி சீட்களுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

கேரளா பிரச்சாரம்: இதனால் அங்குப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரை அங்கே இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி. இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனும், அங்குள்ள சிபிஎம் கட்சித் தலைவர்களும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ என்ற வார்த்தை கூட குறிப்பிடவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதற்கிடையே இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். அதாவது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைத்த பிறகு, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். சிஏஏ தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதை ரத்து செய்வதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றும் சிதம்பரம் கூறினார் தெரிவித்தார்.

ப சிதம்பரம்: அதை ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் மாற்றியமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளோமே.. 10 ஆண்டுகளில் பாஜக தனக்கு இருந்த பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் தவறாகப் பயன்படுத்தியது. இது நாட்டிற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஏஏ ரத்து: பல சட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். குறிப்பாக ஐந்து சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதை நானே உறுதி அளிக்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் நான் தான். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் தான் எழுதினேன். அதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியும். சிஏஏ சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மாட்டோம். அதை முழுமையாக ரத்து செய்வோம்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் முதல் கூட்டத்திலேயே அது ரத்து செய்யப்படும். காங்கிரஸ் இந்த சட்டத்தை இதுவரை எதிர்க்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அது முழு பொய். திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் நாடாளுமன்றத்திலேயே சிஏஏவுக்கு எதிராக பேசியுள்ளார்.

காங்கிரஸ் தான்: கேரளாவில் இடதுசாரிகள் இப்போது ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தல்.. நீங்கள் தேசியளவில் பார்த்தால் இப்போது பாஜகவை எதிர்த்து மத்தியில் ஆட்சி அமைக்கச் சிறந்த கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.. சிபிஎம் அல்ல.

சிபிஎம் இப்போது ஒரே மாநிலக் கட்சியாக மாறிவிட்டது. இதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் மத்தியில் யார் ஆட்சி வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+