டிரவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த.. செல்போன் திடீரென வெடித்து சிதறியது.. கேரளாவில் மீண்டும் ஷாக்
திருவனந்தபுரம்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்த 8-வயது சிறுமி செல்போன் வெடித்து உயிரிழந்த நிலையில், டிரவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து வாலிபர் காயமடைந்துள்ளார்.
மக்களிடையே தற்போது செல்போன்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. 24 மணி நேரமும் செல்போனை விட்டு பிரியாமல் கூடவே வைத்திருக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. பகல் முழுவதும் பயன்படுத்தி விட்டு சிலர் இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டு தூங்குகிறார்கள்.

இன்னும் சிலரோ.. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசுவது..கேம் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். செல்போன்களை இப்படி பயன்படுத்துவது ஆபத்தை விளைவிப்பது எனவும் இதனால் செல்போன்கள் பேட்டரி வெடித்து விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதை காண முடிகிறது.
அதுமட்டும் இன்றி போலியான உதிரிபாகங்களை பயன்படுத்துவது..அங்கீகரிக்கப்படாத சார்ஜர்களை உபயோகப்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்வது ஆகியவை செல்போன் பேட்டரிகள் வெடிப்புக்கு முக்கிய காரணமாக செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் பரவலாக சொல்லப்படும் காரணமாக இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். செல்போன்களால் ஏற்படும் அடுத்தடுத்த இந்த விபத்துக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரஹ்மான் (வயது 23) வழக்கம் போல் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது, திடீரென தனது டிரவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது.

இதனால், டிரவுசரிலும் தீ பிடித்தது. உடனடியாக தீயை ஹரிஷ் ரஹ்மான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென வெடித்து சிதறிய செல்போன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்று ரஹ்மான் தெரிவித்தார்.
அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஹ்மான், முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். செல்போன்களை அதிகப்படியாக பயன்படுத்துவதோடு... சார்ஜ் போட்ட படி போன் பேசுவது.. கேம் விளையாடுவது போன்ற செயல்களால் செல்போனின் பேட்டரிகள் சூடாகி வெடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
செல்போன் நிறுவனங்களுக்கும் இதுபோன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, செல்போன்களை சார்ஜ் போட்ட படி பயன்படுத்தினால் பேட்டரி வெடித்து விபத்து ஏற்படுவது அல்லது மின்சாரம் தாக்குவது போன்ற அபாயங்கள் ஏற்படும் எனவும் எனவே இத்தகைய செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கூறும் அறிவுரையாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications