கேரள லாட்டரியில் ரூ 20 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி என்ன பண்ணியிருக்கார் பாருங்க! ரொம்பவே உஷார்தான்
திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லையாம். பரிசு வென்ற சத்யன் என்பவரை யார் என்று தெரிந்து கொள்ள கேரள மக்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் வங்கியில் லாட்டரியை டெபாசிட் செய்துவிட்டு சென்று விட்டு இருக்கிறார்.
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி XD 387132 என்ற எண்ணுக்கு கிடைத்தது. பரிசு யாருக்கு கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், சத்யன் என்பவர் நேற்று கண்ணூர் மாவட்டம் இரிட்டியில் உள்ள தனியார் வங்கிக்கு மிகவும் ரகசியமாக வந்து பரிசு பெற்ற லாட்டரியை டெபாசிட் செய்துவிட்டு சென்றார்.

முதல் பரிசு ரூ.20 கோடி
தன்னுடைய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரை பற்றி விவரங்களை வெளியிட வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கேரளாவில் தினம் தோறும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தி வருகிறது. இதில் முதல் பரிசாக ரூ.70 லட்சம் வழங்கப்படுகிறது. புதன்கிழமை மட்டும் ஃபிப்டி ஃபிப்டி குலுக்கலில் ரூ. 1 கோடி பரிசுத்தொகை அடிக்கிறது.
இது போக, ஓணம், விஷூ, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பம்பர் லாட்டரிகளையும் விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசாக பல கோடி அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஓணம் பம்பரில் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். அதேபோல கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது.
கண்ணூரில் விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட்
இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் டிக்கெட் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்த பம்பர் சீட்டு ஒன்றின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 10 சீரியல்களில் 50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த 5 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள நிதித்துறை அமைச்சர் பாலகோபால் தலைமையில் நடைபெற்றது.
இரிட்டியை சேர்ந்த சத்யன்
இதில் முதல்பரிசான ரூ.20 கோடி கண்ணூர் மாவட்டத்தில் விற்ற லாட்டரி டிக்கெட் (XD 387132) என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட் கண்ணூரில் செயல்பட்டு வரும் முத்து லாட்டரி விற்பனை நிலையத்தில் விற்கப்பட்டது. இரிட்டி என்ற இடத்தை சேர்ந்த சத்யன் என்பவருக்கு பரிசு அடித்து இருக்கிறது. இவர் மொத்தமாக 10 டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில், ஒரு டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.20 கோடி பரிசு அடித்துள்ளது.
முதல் பரிசு வென்றவரின் பெயர் விவரம் தெரிந்தாலும் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலியை கேரள லாட்டரி அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி, தன்னிடம் உள்ள லாட்டரி டிக்கெட்டை அருகில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்து பரிசுத்தொகையை உரிமை கோரியுள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதால், அவரது விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
"உஷார் பார்ட்டி"தான்
கேராளாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் 25 கோடி பரிசு வென்ற ஆட்டோ டிரைவர் அனூப்பிடம் உதவி கேட்டு அவரது உறவினர்கள், தெரிந்தவர்கள் என பலரும் வீட்டிற்கு சென்றனர். தொந்தரவு தாங்க முடியததால் அனூப் சில நாட்களுக்கு குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து தனக்கு முதல் பரிசு அடித்தது ஏன் என நினைக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது என புலம்பி தள்ளினார்.
இதுபோன்ற சூழல் தனக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்து இருக்க முடிவு செய்து இருக்கிறார் சத்யன். இதனைக்கேள்வி பட்ட கேரள மக்களோ, கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பரில் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி ரொம்பவே உஷார் பார்ட்டிதான் என பேசிக்கொள்கிறார்களாம்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications