21 பேர் கோடீஸ்வரர் ஆகப்போறாங்க! படுஜோராக நடக்கும் கேரளா லாட்டரி சேல்ஸ்!எந்த மாவட்டம் டாப் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் 12 நாட்களே குலுக்குலுக்கு இருப்பதால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். எந்த மாவட்டம் விற்பனையில் முதலிடம் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. அம்மாநிலத்தில் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அது மட்டும் இன்றி வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கல்களும் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகிவிடுவது போல லாட்டரியால் நமக்கும் கோடிகள் கொட்டாதா? என்ற ஆசையால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடியும்.

லாட்டரியில் ஒரு சிலருக்கு பணம் அடிக்க பலரும் லாட்டரி வாங்கி பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்றாலும், என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆசையில் லாட்டரியை பலரும் வாங்குவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் கேரளாவிற்கு சென்றாலும் கூட ஒரு சிலர் லாட்டரி டிக்கெட்டுகளை ஆசையுடன் வாங்குவதையும் பார்க்க முடிகிறது.

ஒரு சில நேரங்களில் வெளி மாநிலத்தவர்களுக்கு கூட பரிசுத்தொகை அடிக்கிறது. கேரளாவில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ 400 விலை கொண்ட இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படுகிறது. அது போக ரூ.1 கோடி தலா 20 பேருக்கு வழங்கப்படுகிறது. 21 பேரை கோடீஸ்வரர் ஆக்கப்போகும் கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
லாட்டரி விற்பனை தொடங்கியதில் இருந்தே மின்னல் வேகத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. குலுக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 33 லட்சத்து 78 ஆயிரத்து 990 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகும் எனத்தெரிகிறது. இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் அச்சிடபடலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 650 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 290 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இந்த பட்டியலில் மூன்றாவதாக திரிச்சூர் மாவட்டம் உள்ளது. திரிச்சூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 280 டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரியில் மூன்றாவது பரிசக 30 வின்னர்களுக்கு தலா ரூ.10லட்சம் அளிக்கப்படும். 4-வது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும். ஐந்தாவது பரிசாக 20 பேருக்கு தலா இரண்டு லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும். லாட்டரி குலுக்கல் வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications