இதுதாங்க அதிர்ஷ்டம்.. கேரளா லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற கோவை நபர்! யாருங்க இவரு? முழுவிபரம்
திருவனந்தபுரம்: கேரளா திருவோணம் லாட்டரியில் முதல் பரிசாக கோவை சேர்ந்த நபருக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்நிலையில் தான் அந்த நபர் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
லாட்டரி.. சிலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்தாலும் பலருக்கு ஏமாற்றத்தை மட்டுமே வழங்கும் அதிர்ஷ்ட சீட்டு. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை என்பது தடை செய்யப்பட்டுள்ளது. பலரும் அதிர்ஷ்டத்தை நம்பி உழைத்த பணத்தை லாட்டரி சீட்டு வாங்க செலவிட்டு ஏமாற்றமடைந்ததால் தமிழ்நாட்டில் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

மாறாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைமுறையில் இருந்து வருகிறது. கேரளாவில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் ஏராளமான லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளுக்கு அதிகளவிலான பரிசுத்தொகை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஓணம் பண்டிகைக்கான லாட்டரி விற்பனை என்பது கேரளாவில் படுஜோராக நடக்கும். அந்த வகையில் தான் இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகைக்கான லாட்டரி விற்பனையும் களைகட்டியது.
அந்த வகையில் கேரளா அரசு சார்பில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகையாக அறிவித்து திருவோணம் பம்பர் பிஆர் 93 எனும் லாட்டரி விற்பனையும் மும்முரமாக நடந்தது. இதில் முதல் நாளில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாங்கினார்கள். இந்த லாட்டரி ஒன்று ரூ.500க்கு விற்பனை செய்யப்ட்டது. மொத்தம் 85 லட்சம் லாட்டரிகள் அச்சிடப்பட்ட நிலையில் 75.76 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த லாட்டரி சீட்டை கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானவர்கள் வாங்கினார்.
இதையடுத்து திருவோணம் பம்பர் பிஆர் 93 லாட்டரிக்கான குலுக்கல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு என்பது கோவையை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு விழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார். இவர் மொத்தம் 10 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில் தற்போது அவர் முதல் பரிசை வென்றுள்ளார். இவர் வாங்கிய TE 230662 என்ற லாட்டரிக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது.
இந்த லாட்டரியை கோழிக்கோடு சேர்ந்த பாவா ஏஜென்சியின் பாலக்காடு வாளையார் கிளை விற்பனை செய்தது. நடராஜன் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை 4 நாட்களுக்கு முன்பு குருசாமி என்பவரிடம் இருந்து வாங்கிய நிலையில் தற்போது ரூ.25 கோடிக்கு சொந்தக்காரராகி உள்ளார். இதன்மூலம் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் ஒரே நாளில் ரூ.25 கோடி வென்று கோடீஸ்வரராகி உள்ளார்.
மேலும் இந்த லாட்டரியில் 2வது பரிசாக மொத்தம் 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும், 3வது பரிசாக 20 பேருககு தலா ரூ.50 லட்சமும், 4வது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், 5வது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications