மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு சிக்கல்.. பல்லாயிரம் கோடி சொத்துகளை மறைத்துவிட்டதாக புகார்!
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் வேட்பு மனுவில், பல்லாயிரம் கோடி சொத்துகளை மறைத்து பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருந்து வருகிறார் சசி தரூர். எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் அவரே காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பன்யன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் திருவனந்தபுரம் தேர்தல் களம் கடும் போட்டியால் தகிக்கிறது.

பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் களமிறங்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். தனது முதல் மக்களவை தேர்தலை இப்போதுதான் சந்திக்கிறார். திருச்சூர் வம்சாவளியை சேர்ந்தது ராஜீவ் சந்திரசேகரின் குடும்பம். எனவே, திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக அவரை முதல் முறையாக களமிறக்கியுள்ளது.
ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனு: இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராஜீவ் சந்திரசேகர். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2021-22 ஆம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கணக்கு காட்டியுள்ளார்.
ராஜீவ் சந்திரசேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், வாக்காளர் சார்பிலும் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் புகார்: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ரெஞ்சித் தாமஸ் என்பவர், அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராஜீவ் சந்திரசேகர் தனக்கு 36 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், அமைச்சர் தனது சொத்து அறிவிப்பில் தனது வீடு, சொகுசு கார்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்லியனர் ராஜீவ் சந்திரசேகர்: மேலும், ராஜீவ் சந்திரசேகர் ரூ.6.3 கோடி என கணக்கு காட்டியுள்ள 4 நிறுவனங்களின் மதிப்பு மத்திய அரசின் இணையதளத்தில் ரூ.1,610 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள் உள்ளன. அவர் ஒரு பில்லியனர் என்பது உலகுக்கே தெரியும். சொந்தமாக விமானமும் வைத்துள்ளார். ஆனால், வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருக்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் வேட்பு மனுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்துக்களுக்கும் அவரது உண்மையான சொத்துக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த முரண்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்தி, தவறான பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததற்காக ராஜீவ் சந்திரசேகர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை இந்தத் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications