கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் மாநில அரசு.. 14 பேர் தனிமைப்படுத்தல்
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அனைவருமே முதன் முதலில் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பு உடையவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகினர். மேலும் இறந்தவர்களில் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை கேரள மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த நபர்கள் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 24 வயதான ஒரு ஊழியருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர், கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நிபா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நிபா வைரசால் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 வயது சிறுவன் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் 11 பேரின் ரத்த மாதிரி, உமிழ்நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு புனே வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு மத்திய அரசு அதிகாரிகளுடன் கேரள முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "ஆகஸ்ட் 30 ஆம் தேதி உயிரிழந்த நபருடன் நெருக்கமான (ஹை ரிஸ்க்) தொடர்பில் இருந்த அனைத்து நபர்களிடமும் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். நிபா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் மருத்துவ அறிக்கை ஒவ்வொரு 12 மணி நேரமும் மாநில சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டு வருகிறது.
நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நபருடன் தொடர்பு எதுவும் இல்லாத 14 பேர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 11 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளது. எனவே அவர்கள் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் முதல் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான். தற்போது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications