உருக்குலைந்த வயநாடு.. இதுதான் அங்கே சிக்கலே.. மோசமான கிளைமேட்.. குன்னூரிலிருந்தும் கிளம்பிய வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேலான உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருப்பதால் அவர்களை மீட்கும்பணி நடக்கிறது.

இன்று விடிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது... இதற்கு முக்கிய காரணம், நேற்று ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.. இதனை தொடர்ந்தே நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.

Wayanad Landslide

தென்மேற்கு பருவமழை: வழக்கமாக ஒவ்வொருமுறையும் மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம், இடுக்கி போன்ற மாவட்டங்கள் தான்... இந்த முறை தென்மேற்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இதில், வயநாட்டிலுள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருக்கிறது..

அதனால்தான், வானிலை மையமும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் வெளியிட்டவாறே இருந்தது. எனினும் நேற்றைய தினம், விடிகாலையிலிருந்தே மழை வெளுத்தெடுத்துவிட்டதாம்..

நிலச்சரிவுகள்: வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா பகுதிகளில், அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரையில் இந்த நிலச்சரிவு நடந்துள்ளது.. அதாவது, 4 மணிநேரத்தில் 3 நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் முண்டக்கை டவுன் பகுதியில் மட்டுமே 2 முறை முறை நிலச்சரிவு ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.. இந்த முண்டக்கை டவுனில் மட்டும் கிட்டத்தட்ட 100 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல, சூரல்மலா கிராமமே பெருத்த சேதத்துக்கு ஆளாகியிருக்கிறது.. இந்த கிராமத்தில் மடடும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது கிலியை தந்து வருகிறது. இந்த பகுதியிலுள்ள அட்டமலை கிராமத்தில் ஆறு ஒன்று ஓடுகிறது.. இந்த ஆற்றில் மட்டுமே 6 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன..


சாலியாறு: அதேபோல, சாலியாற்றிலிருந்தும் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றியிருக்கும் ஆறுகளில் மேலும் சடலங்கள் கிடைக்கலாம் என்பதால், அங்கும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

இந்த சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியுமாம்.. ஆனால், இந்த 2 ஊர்களையும் இணைக்கும் பாலமும், நிலச்சரிவில் உடைந்துவிட்டது. அதனால்தான், முண்டக்கை டவுனுக்கு போக முடியாமல் மீட்பு படையினர் திணறி கொண்டிருக்கிறார்கள்.

தரையிறக்க முடியவில்லை: எனவே, 2 ஹெலிகாப்டர்கள் அந்த பகுதிக்கு கோழிகோட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.. ஆனால், அங்கு மோசமான காலநிலை நிலவுவதால், ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாமல், மறுபடியும் கோழிகோட்டுக்கே திரும்பிவிட்டன.

விமானப்படை உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது... சூலூர் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் செல்கின்றன. குன்னூரிலிருந்தும் ராணுவ வீரர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

மீட்பு பணிகள்: 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூரில் இருந்து வயநாடு விரைந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, மீட்பு பணிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், 250 வீரர்களும், உள்ளூர்வாசிககளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்..

இன்று நள்ளிரவிலிருந்தே கனத்த மழை பெய்து வரும்நிலையில், மீட்பு பணியில் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதனிடையே, இன்று வயநாடு மாவட்டத்தில் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. அதேபோல, வயநாட்டின் அண்டை மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதுடன், மேற்கண்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: மேலும், பத்தினம்பட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு போன்ற உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மேற்கண்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+