"இது"தான் மொத்த இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம்.. விறுவிறு பணியில் அதிகாரிகள்
கேரளா வயநாட்டில் இளைஞர்களுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இளைஞர்கள் எல்லாருக்குமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.. இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா பரவல் மிகுதியாக உள்ளது.
இங்கு, கடந்த மாதம் ஒரே வாரத்தில் 1.5 லட்சம் பேருக்கு தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டது.. கேரளாவில் தொற்று பரவல் திடீர் அதிகரிப்புக்கு காரணம் டெல்டா வகை வைரஸ் என்பது தெரிய வந்தது..

பரவல்
அதாவது, கடந்த மார்ச் மாதத்தில் ஆல்பா வைரஸ் அதிகளவில் பரவி இருந்தது.. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் காப்பா என்ற புதிய வைரஸ் அதிகமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது... அந்த வகையில், ஜூன், ஜூலை மாதங்களில் வயநாடு, எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டெல்டா வைரஸ் அதிகளவு பரவி இருந்தது கண்டறியப்பட்டது.

எச்சரிக்கை
அதுமட்டுமல்ல, கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஒரு எச்சரிக்கை ஏற்கனவே வெளியாகி இருந்தது.. அதனால்தான், ஒட்டுமொத்த கேரள மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மற்றொரு புறம், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது...

தொற்று
அந்த குழுவும், தொற்று அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.. மேலும் மாநில அரசின் முயற்சிகளுக்கு முடிந்த அளவு உதவுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தது. எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை மத்திய குழு ஆய்வுகளை நிறைவு செய்தது.. அவ்வப்போது தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில அரசை அலர்ட் செய்து வருகிறது.
Recommended Video

பாதிப்பு
தற்போது, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில், கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நடப்பு 2021-ம் ஆண்டில் கேரளாவில் உள்ள 3.54 கோடி பேரில் 50.25 சதவீதம் பேருக்கு (1,77,88,931) கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது.. கடந்த ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து 213 நாட்களில் இந்த சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது..

இலக்கு
வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இப்போது 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... மேலும், பிற நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. வயநாடு எம்பி தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications