திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3வது அலையா.. தொற்று அதிகரிக்க என்ன காரணம்.. 7 மாவட்டங்களில் நடந்த ஆய்வு.. கிலியை தரும் கேரளா

கேரள மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது... இதனால் அம்மாநில அரசு கொரோனா தடுப்பு தீவிரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கேரளாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.. இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லைதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த தினசரி வைரஸ் பாதிப்பு.. 26 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

இங்கு, கடந்த 6 நாளில் மட்டும் 1.5 லட்சம் பேருக்கு தொற்று பரவி இருக்கிறது.. கேரளாவில் தொற்று பரவல் திடீர் அதிகரிப்புக்கு காரணம் டெல்டா வகை வைரஸ் என்பது தெரிய வந்துள்ளது.

 ஆய்வு

ஆய்வு

குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில் ஆல்பா வைரஸ் அதிகளவில் பரவி இருந்தது தெரியவந்தது.. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் காப்பா என்ற புதிய வைரஸ் அதிகமாக பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டது... அந்த வகையில், ஜூன், ஜூலை மாதங்களில் வயநாடு, எர்ணாகுளம், காசர்கோடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டெல்டா வைரஸ் அதிகளவு பரவி இருப்பது தெரியவந்துள்ளது..

 பாதிப்பு

பாதிப்பு

அதுமட்டுமல்ல, கேரளாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும், அவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஒரு எச்சரிக்கை வெளியாகி இருந்தது.. இதனையடுத்து கேரள மாநிலத்தில் மறுபடியும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 கர்நாடகா

கர்நாடகா

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது... அம்மாநிலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 கட்டுப்பாடு

கட்டுப்பாடு

இதுவரை அங்கு 34 லட்சத்து 25 ஆயிரத்து 473 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... அந்த குழுவும், தொற்று அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.. மேலும் மாநில அரசின் முயற்சிகளுக்கு முடிந்த அளவு உதவுவதாகவும் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

 ஆய்வுகள்

ஆய்வுகள்

இதுவரை எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களில் இதுவரை மத்திய குழு ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது... இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆய்வு நடந்து முடிந்தது.. ஆய்வுப்பணி முழுமையாக நிறைவடைந்த பிறகு தொற்றுக்குறைப்பு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை மத்திய குழு வழங்க உள்ளது.

 காரணங்கள்

காரணங்கள்

முன்னதாக, நடந்து முடிந்த ஆய்வுகள் வைத்து அந்த குழுவினர் கருத்து தெரிவிக்கையில், தொற்று குறையாமல் இருப்பதற்கு குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மற்றும் குறைந்த செரோபிரெவலன்ஸ் போதுமான காரணம் என்பது காரணங்களாக இருந்தாலும், பக்ரீத் பண்டிகைக்கு முன்பே கேரளா தொற்றுநோய்களின் அதிகரிப்பை காண தொடங்கியது என்கிறார்கள்

அழுத்தம்

அழுத்தம்

மேலும், தொற்று பரவுவதை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இருப்பதால் மற்ற எல்லா மாநிலங்களையும் போலவே கேரள மாநிலமும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால்தான், மக்களிடமிருந்து ஊரடங்கை திறக்க அழுத்தம் அதிகமாகி வருவதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது..

 கண்காணிப்பு

கண்காணிப்பு

மாநில மக்களின் நிலைமை புரிந்தாலும், அதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், கேரளாக்காரர்கள் இந்த முறை முன்பு போல் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாது என்றும் அக்குழுவினர் எச்சரித்து உள்ளனர்... பக்கத்து மாநிலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கன்னியாகுமாரி, தேனி, கோவை தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus raises in Kerala and Central Committee study in six districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X