கூலி பட நடிகர் சௌபின் ஷாகிர் வெளிநாடு செல்ல தடை! துபாயில் SIIMA விருதை வாங்க மூடியாதே!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: "கூலி" பட நடிகர் சௌபின் ஷாகிர் வெளிநாடு செல்ல தடை விதித்து எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. "மஞ்சுமெல் பாய்ஸ்" திரைப்பட பண மோசடி வழக்கில் சிக்கியதால் இப்படிப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"மஞ்சுமெல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சௌபின் ஷாகிர் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

வழக்கின் விவரங்கள்
- புகார்தாரர்: ஆசிராஜ் வாலியத்துரா ஹமீத் என்ற தொழிலதிபர், தான் ரூ. 7 கோடி முதலீடு செய்ததாகவும், அதற்குப் பதிலாக 40% லாபம் வழங்குவதாக மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் உறுதியளித்ததாகவும் புகார் அளித்தார்.
- மோசடி குற்றச்சாட்டு: திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றும், தான் எதிர்பார்த்த லாபம் அல்லது முழு முதலீட்டையும் தயாரிப்பாளர்கள் வழங்கவில்லை என்று ஆசிராஜ் குற்றம் சாட்டினார்.
- போலீஸ் விசாரணை: ஆசிராஜின் புகாரின் அடிப்படையில் கேரளாவில் உள்ள மரடு போலீசார், சௌபின் ஷாகிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ. 18.65 கோடி என்று கண்டறியப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர்கள் முதலீட்டாளரிடம் ரூ. 22 கோடி என்று கூறியுள்ளனர். இது திட்டமிட்ட மோசடி என்று போலீஸ் அறிக்கை சமர்ப்பித்தது.
தற்போதைய நிலை
- கைது மற்றும் பிணை: சௌபின் ஷாகிர் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியதால், அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
- நீதிமன்ற நடவடிக்கை: இந்த வழக்கு ஒரு சிவில் மற்றும் வணிக ரீதியிலான தகராறு என்று நீதிமன்றம் கருதியது, இருப்பினும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பயணத்தடை: துபாயில் நடைபெறவிருந்த விருது விழாவில் கலந்துகொள்ள சௌபின் ஷாகிர் பயண அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால், சௌபின் அவரை சந்தித்தால் வழக்கு விசாரணையில் பாதிக்கக்கூடும் என்று அரசு தரப்பு வாதிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications