காதலனை கடத்திய காதலி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்தது ஏன்? தந்தை பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கடத்திய 19 வயது காதலி, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக போலீசாரும், பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் கூறுகையில், திருவனந்தபுரம் அருகே வர்கலா பகுதியில் அயிரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், செருன்னியூரைச் சேர்ந்த லட்சுமி பிரியா (19 வயது) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்திருக்கிறார்கள்.

Ernakulam collage student held in Kerala over kidnap, torture of ex-lover

பள்ளி பருவத்திற்கு பின்னர் கல்லூரியில் படிக்க விரும்பிய லட்சுமி பிரியா கல்லூரி படிப்பிற்காக எர்ணாகுளம் சென்றுள்ளார். எர்ணாகுளத்தில் ஒரு கல்லூரியில் பிசிஏ பயின்று வந்துள்ளார். அங்கு அமல் என்ற இளைஞருடன் லட்சுமி பிரியாவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது.

இதனிடையே திருவனந்தபுரம் வர்குலாவைச் சேர்ந்த மாணவனும் லட்சுமி பிரியாவை காதலித்தே வந்துள்ளார். லட்சுமி பிரியாவோ தனது முன்னாள் காதலனை கழட்டிவிட முடிவு செய்திருக்கிறார். இருவரும் உறவை முறித்துக் கொள்ளலாம் என அவரிடம் லட்சுமி பிரியா பேசி பார்த்திருக்கிறார். ஆனால் அந்த மாணவன் உறுதியாகவே இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, தனது காதலன் அமுல் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாணவனை கடந்த ஏப்ரல் 5ம் தேதி காரில் கடத்தி உள்ளனர்.

Ernakulam collage student held in Kerala over kidnap, torture of ex-lover

காரில் வைத்து பேசி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த மாணவன் உறுதியாக இருந்ததால், ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியாவின் நண்பர்கள் மாணவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வழியில், ஆலப்புழாவில் நிறுத்தி, வாலிபரின் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்திருக்கிறார்கள். பின்னர், மாணவனை எர்ணாகுளம் தம்மனம் அருகே உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பல் அவரை அங்கேயே கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் மாணவனின் ஆடைகளை அவிழ்த்து, மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர் என மாணவனின் தந்தை கூறினார்.

இது பற்றி மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார், எர்ணாகுளத்தை சேர்ந்த லட்சுமி பிரியாவின் காதலன் அமலை முதலில் கைது செய்தனர். அதன்பின்னர் லட்சுமி பிரியாவை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனிடையே மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் லட்சுமி பிரியாவின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+