மீண்டும் மீண்டுமா? கேரள மாலில் குவிந்த மக்கள்.. எஸ்க்லேட்டரே முடங்கியதால் பரபரப்பு.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு வணிக வளாகத்தில் தல்லுமாலா திரைப்படத்தின் புரோமஷன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால் புரோமசன் நிகழ்ச்சியையே படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனர்.
பிரபல மலையாள இயக்குனர் காலித் ரகுமான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள தலுமல்லா படம் நாளை வெளியாகிறது.
தல்லுமாலா திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கப்பட்டிருதது.

கட்டுக்கடங்காத கூட்டம்
இந்த நிலையில், படத்திற்கான புரோமஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல ஹைலைட் மாலில் படத்திற்கான புரோமஷன் நடைபெற இருந்தது. இந்த விழாவில் படத்தின் ஹீரோ, ஹீரோயின் உள்பட பலரும் கலந்து கொள்ள இருந்தனர். புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நடிகர், நடிகைகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தது.

தலைதெறிக்க ஓடிய படக்குழுவினர்
மால் முழுவதும் எங்கும் மனித தலைகளாக தென்பட்டன. மாலின் எஸ்கலேட்டர் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். ஒரு அங்குல இடைவெளி கூட இடைவெளியின்றி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. கட்டுக்காங்காத கூட்டத்தை கண்டு பதறிப்போன படக்குழு உடனடியாக புரோமஷனல் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு தலைதெறிக்க ஓடியது. ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிற்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றன.

நெட்டிசன்கள் கருத்து
பட புரோமஷன் நிகழ்ச்சிகளை ஏற்பாடும் செய்யும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ரசிகர்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம் எனவும் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள லூலூ மாலில் இதுபோன்று கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது அனைவருக்கும் நினைவிருக்கக்கூடும். அதாவது, கடந்த ஜூலை 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் 7 ஆம் தேதி அதிகாலை வர தள்ளுபடி விலையில் சிறப்பு விற்பனை லூலு மாலில் நடைபெற்றது.

மீண்டும் ஒரு நிகழ்வு
இதை அறிந்த மக்கள் நள்ளிரவு வேலையிலும் அணி அணியாய் திரண்டு வந்தனர். அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வரிசை எதையும் பொருட்படுத்தாது வாடிக்கையாளர்கள் முண்டியடித்துகொண்டனர். அவர்களை சமாளிக்க முடியாமல் மால் ஊழியர்களும் திணறினர். இந்த நிகழ்வும் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், மீண்டும் கேரள மாலில் அதேபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications