ஆளுநர் vs அரசு.. அமைச்சர் பாலகோபாலை நீக்குக.. முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் கான் கடிதம்!
திருவனந்தபுரம்: கேரள நிதியமைச்சர் பாலகோபாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் ஆளுநர் - முதலமைச்சர் இடையிலான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கேரள அமைச்சர்களுடன் ஆளுநருக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அமைச்சர் பாலகோபால் பேச்சு
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் பேசுகையில், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால், ஜனநாயகம் மிகுந்த கேரள மாநிலத்தின் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து புரிந்து கொள்ள முடியாது. பனாராஸ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களுக்கு கூட 50 முதல் 100 பேர் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுபோன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கேரள பல்கலைக்கழங்கள் செயல்பாட்டை புரிந்துகொள்வது கடினம் என மறைமுகமாக ஆளுநரை விமர்சித்து இருந்தார்.

தேச ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவால்
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உயர் கல்விமுறை கடைபிடிக்கும்போது அது குறித்த தவறான தோற்றத்தை உருவாக்க அமைச்சர் பாலகோபால் முயல்கிறார். பாலகோபால் கருத்து தேச ஒற்றுமைக்கு மட்டுமல்லாது, ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுப்பதாகும். நமது அரசியலமைப்பு சட்டம் ஆளுநர்கள் வெளிமாநிலத்திலிருந்து வருவதை அவசியமாக்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.

பதவியில் இருந்து நீக்குக
அது மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வராது. அந்த பல்கலைக்கழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து அதிக துணைவேந்தர்களைக் கொண்டுள்ளது என்பது பாலகோபால் அறியவில்லை. அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளை அறியதவராக அமைச்சர்கள் உள்ளனர். பதவிப்பிரமாணத்தின் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறிவிட்டார். அதனால் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டது.

பினராயி விஜயன் மறுப்பு
இதற்கு நிதியமைச்சர் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமைச்சர் பாலகோபாலின் பேச்சு ஆளுநர் பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்தவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications