கேரளா: மிதக்கும் பாலம் உடைந்து 15 பேர் கடலில் விழுந்ததால் பரபரப்பு.. உயிரைக் காத்த லைஃப் ஜாக்கெட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வர்கலாவில் மிதக்கும் பாலம் உடைந்து 15 பேர் கடலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் உயிர் காக்கும் கவசம் (life jacket) அணிந்திருந்ததால் கடலில் மூழ்காமல் தப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்தது. கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மிதக்கும் பாலத்தில் சென்ற 15 பேர் கடகுக்குள் விழுந்தனர். கடலில் விழுந்த 15 பேரில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

தவறி விழுந்தவர்கள் அனைவரும் உயிர் காக்கும் உடை அணிந்திருந்ததால் கடல் நீரில் மூழ்காமல் மேலே மிதந்தனர். இதையடுத்து உடனடியாக மீட்புப்படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கடலில் இறங்கி 15 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலில் விழுந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்பு நீரை குடித்ததால் 2 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்கரையில் இருந்து கடலுக்குச் செல்லும் மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. 3 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தில் சென்று, கடலை நெருக்கமாகப் பார்வையிடலாம். 700 கிலோ எடையில் மிகவும் பலமான பிளாஸ்டிக் பிளாக்குகள் மூலமாக இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தில் செல்பவர்கள் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன் காரணமாகவே, பாலம் உடைந்து விழுந்தாலும் 15 பேரும் இன்று கடலில் மூழ்காமல் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து வர்கலா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மிதக்கும் பாலத்தில் நின்றவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், உயிர் சேதம் இன்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் கரைக்கு கொண்டு வர முடிந்தது." எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications