குட் பேட் அக்லி வில்லன் நடிகர் ஹோட்டலில் இருந்து தப்பி ஓட்டம்! அதிகாரிகள் ரெய்டுக்கு வந்ததால் எஸ்கேப்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த குட் பேட் அக்லி திரைப்பட வில்லன் நடிகர் ஷைன் டோம் ஷாக்கோ, திடீரென தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹோட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பும் வகையில் இரவு 11 மணியளவில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
கடந்த வாரம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தவர் ஷைன் டாம் ஷாக்கோ. பிரபல மலையாள நடிகரான இவர் மீது அண்மையில் நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார்.

அதாவது, சூத்ரவாக்கியம் படத்தின் படப்பிடிப்பின் போது, ஷைன் டாம் ஷாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிலிம் சேம்பர் மற்றும் உள் புகார்கள் குழுவிடம் புகாரும் அளித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த ஷைன் டோம் ஷாக்கோ, தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹோட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த நிலையில், அவர்களிடம் இருந்து தப்பும் வகையில், இரவு 11 மணியளவில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்து அவர் தப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஹோட்டலின் ஜன்னல் வழியே வெளியேறி அவர் தப்பி ஓடும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஷாக்கோ தங்கியிருந்த ஹோட்டல் அறையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. ஷாக்கோவுடன் தங்கியிருந்த பெண் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ஷாக்கோ வந்து இருக்கிறார்.
சற்று நேரத்தில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையை புக் செய்து இருக்கிறார். அன்று மாலை இருவரது நண்பர்களும் ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அன்று மாலை கிடைத்த ரகசிய தகவலின் படி D-hunt சிறப்பு குழு ஹோட்டலுக்கு ரெய்டு சென்றது. ஆனால் அங்கிருந்து ஷாக்கோ தப்பிவிட்டார்" என்றனர்.












Click it and Unblock the Notifications