நடிகையுடன் உறவு.. அட்ஜெஸ்ட்மென்ட்.. உடம்பு தெரியும்படி டிரஸ்.. ஹேமா கமிட்டி அறிக்கையில் சாரதா நறுக்
திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டியின் அறிக்கையானது, பல்வேறு அதிர்வலைகளை, கேரள சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், மலையாள அரசியல், சினிமா துறைகளில் பெரும் பரபரப்பும் நிலவி கொண்டிருக்கிறது.
"ஷூட்டிங்கில் பெண்களுக்கு, டிரஸ் மாற்றக்கூட வசதி செய்து தருவதில்லை.. பாத்ரூம் வசதியும் இல்லை.. சினிமா வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக அட்ஜெஸ்ட் செய்யும் துன்புறுத்தல்களையும் சகிக்க வேண்டிய நிலைமை உள்ளது.. இதுகுறித்து புகார் அளிக்கக்கூட பெண்கள் யாருமே முன்வருவதில்லை என்று மலையாள சினிமாத்துறையின் பெண்கள் அமைப்பினர், முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்திருந்தனர்.

ஹேமா கமிட்டி: இதையடுத்து, கேரள நடிகைகள், மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை நியமிக்கப்பட்டது.
இந்தக் கமிஷனானது, நேற்று முன்தினம் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தது.. அதில், "10-15 போ் அடங்கிய அதிகார ஆண் கும்பல், பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறது
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள சினிமாவில் நிறைய உள்ளது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமா சாய்ஸ் வழங்கப்படுகின்றன. முத்தக்காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.. இதற்கு மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள்.
தொல்லைகள்: நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட லிஸ்டில் ஏராளமான முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் தொல்லைகள் தரப்படுகின்றன. வலுக்கட்டாயமாக நுழைந்து ஆபாசமாக பேசி பெண்களை, பாலியல் ரீதியாக பணிய வைக்க பார்க்கிறார்கள்" என்றெல்லாம் ஒன்றுவிடாமல் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்த அறிக்கை கேரளா சினிமாவையே தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பிரபல நடிகர்களும் இந்த புகாரில் சிக்கியிருப்பது, அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது. நான்கரை வருடம் வருடம் கழித்து வெளியாகியிருக்கும் இந்த கமிஷனின் அறிக்கைதான், கேரள சினிமாவில் மட்டுமல்ல, கேரள அரசியலிலும் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
நடிகை சாரதா: இது தொடர்பான பிரபலங்களின் கருத்துக்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, தேசிய விருது பெற்ற முதுபெரும் நடிகை சாரதா இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை தற்போது கூறியிருக்கிறார்... காரணம், பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவில் நடிகை சாரதாவும் இடம்பெற்றிருந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பே கேரள முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது வெளியாகி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் வெளியான நிலையில், அதில் நடிகை சாரதா கூறியிருப்பதாக வெளியான தகவல், பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
பரிந்துரை: சினிமா தொடர்பான அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க பரிந்துரையை நடிகை சாரதா வழங்கியிருக்கிறார். அதில் "இன்று தொழில்துறையில் உள்ள பல பெண்கள், உடை அணியும் விதம் சரி கிடையாது.. மறைப்பதை விட, அவர்களின் உடை அணிவது அவர்களின் உடல் உறுப்புகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது..
அந்த காலத்தில் எல்லாம், செட்களில் பாலியல் இரட்டை அர்த்தத்துடன் உரையாடல்கள் என்பதே கிடையாது.. அதேபோல, நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அல்லது டெக்னீஷியன்களை தொடுவது போன்ற பாலியல் வன்கொடுமைகள் எதுவும் செட்களில் இல்லை. இன்று திரையுலகில் இதுபோன்ற தொல்லைகள் இல்லை என்று சொல்ல முடியாது
கலாச்சாரம்: மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் நம்முடைய சமூகத்தில் புரையோடிப்போயுள்ளது.. இன்றைய சமூகம் முந்தைய காலத்திலிருந்து வேறுபட்டது... புதிய தலைமுறையின் கலாச்சாரம் வேறுபட்டது... அதனால், எல்லாருமே சுலபமாக ஒருவரோடு ஒருவர் கலந்துவிடுகிறார்கள்...
அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் ஒத்துப்போதல் என்பதெல்லாம் இப்போது வெளிப்படையான சர்வசாதாரணமாக ஒன்றாகிவிட்டது. ஆனால் அப்போது ஒளிவுமறைவாக இருந்தது" என்று நடிகை சாரதா தெரிவித்துள்ளார்.
அதேபோல, நீதிபதி ஹேமா தலைமையிலான நிபுணா் குழு அறிக்கை வெளியாகி, கேரள அரசியலிலும் மிகப்பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை நான்கரை ஆண்டு காலம் வெளியிடாமல் இருந்ததற்காகவே, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தன.. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி குற்றவாளிகளை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு பாதுகாக்கிறதா? என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தன.
குற்றச்சாட்டுகள்: இப்போது அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு முழு ஆதரவு தெரிவிக்கும் என்றும், பாதிக்கப்பட்டவா்களுடனும் பெண் சமூகத்துடனும் அரசு என்றும் துணை நிற்கும், ஆனால், இந்த அறிக்கையில் எந்த தனிநபா் குறித்தும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று கலாசார விவகாரத் துறை அமைச்சா் சாஜி செரியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சா் செரியனின் இந்த கருத்தை காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் விமர்சித்திருக்கிறார்.. "சினிமா நடிகைகள், ஹேமா குழுவிடம் மட்டுமே சென்று புகாரளித்ததாகவும் அரசிடம் புகாரளிக்கப்பட்டிருந்தால் முறையான விசாரணையை நடத்தியிருப்போம் என்றும் கலாசார விவகாரத் துறை அமைச்சா் சொல்கிறாரே? இந்த குழுவை அரசுதானே நியமித்தது?
வெட்கக்கேடு: அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 5 ஆண்டுகளுக்கு மௌனம் காத்த அரசின் செயல் வெட்கக்கேடானது" என்கிறார்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் சொல்லும்போது, "குழு பரிந்துரைத்த ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவா்களுடன் நிற்கும் அரசு, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்.. விரிவான திரைத்துறை சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண தீா்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது" என்றாா்.
ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள இன்னொரு முக்கியமான விஷயம், "தனக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வாய் திறந்தால், அவர் பிரச்சினைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக "அம்மா" (மலையாள நடிகர் சங்கம்) உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் உரிய கவனம் எடுத்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications