உடம்பே சிலிர்க்குதே! 102 வருடத்திற்கு முன்.. வயநாட்டில் நடந்த அந்த சம்பவம்..தொடக்க புள்ளியே அதுதான்
திருவனந்தபுரம்: வயநாட்டில் 102 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று இப்போது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் பல முறை அங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும் 102 வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிலச்சரிவுதான் மிகப்பெரிய ஒரு நிலச்சரிவாக பார்க்கப்படுகிறது.
102 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் மாதம் அங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு மலபாருடன் ஒப்பிடும்போது, வயநாட்டில் கடுமையான சேதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், வயநாட்டில் அப்போது பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அந்த வெள்ளம் காரணமாக அங்கே ஐந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது.

அவற்றில் இரண்டு நிலச்சரிவுகள் மொத்தமாக வீடுகளை மூடின. சுமார் 200 வீடுகள் இந்த நிலச்சரிவில் சிக்கின. சில முக்கிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மானந்ததொட்டி, மேப்பர்ஸ் மற்றும் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கோழிக்கோடு மற்றும் வயநாடு மற்றும் டெல்லிச்சேரி மற்றும் சமவெளியில் உள்ள பிற இடங்களுக்கு இடையே சாலை அந்த நிலச்சரிவு காரணமாக மொத்தமாக மூழ்கியது.. வயநாட்டில் வரலாற்றில் அதற்கு முன் இவ்வளவு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதில்லை. அதுதான் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஆகும்.
அந்த நிலச்சரிவுதான் அதற்கு பின் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தொடக்கம் ஆகும். இந்த நிலச்சரிவு காரணமாக அங்கே மண் அரிப்பு ஏற்பட்டது. இது சாயில் பைப்பிங் நிகழ்விற்கு காரணமாக அமைந்தது. அதன்பின்பே அங்கே அடிக்கடி பெரிய நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
சாயில் பைப்பிங்: வயநாடு மற்றும் கேரளாவில் மற்ற பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட சாயில் பைப்பிங் என்ற பிரச்சனைதான் காரணம். அதாவது மணல் குழாய். இப்போது மண்ணிற்கு கீழ் பைப் ஒன்றை வைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பைப்பை சுற்றி இருக்கும் மண் பொதுவாக கொஞ்சம் வலிமை இழந்து இருக்கும்.
அதுவே இயற்கையாகவே மண்ணுக்கு அடியில் குழாய் போன்ற அமைப்பை தண்ணீர் மூலம் உருவாகிறது என்று வைத்துகொள்வோம். வலிமை இல்லாத மண் காரணமாக குழாய் போன்ற அமைப்பு மண்ணுக்கு கீழே தண்ணீர் மூலம் உருவாக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த தண்ணீர் அந்த மண்ணை மேலும் வலிமை இழக்க செய்து அதை சரிய செய்யும்.
இதுதான் கேரளாவில் நடக்கிறது. அங்கே இருக்கும் மண் வலிமை இன்றி இருக்கிறது. இப்படி மண் வலிமை இன்றி இருப்பதால் தானாக அங்கே மண் உள்ளே தண்ணீர் மூலம் சாயில் பைப் ஏற்படுத்தப்படுகிறது. இது பின்னர் மண் சரிய முக்கிய காரணமாக மாறி விடுகிறது.
ஷாக் சம்பவம்: வயநாட்டில், முண்டக்காய் நகரில் கடந்த வாரம் கனமழையின் போது முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளி அருகே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர், சேறும் சகதியுமாக இருந்தது. அங்கே இதுவரை நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 450 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 1000ஐ தொடும் என்ற அச்சமும் உள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications