திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் தேவை அதிகரிப்பு.. தமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் அனுப்ப முடியாது.. பிரதமருக்கு பினராயி கடிதம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவின் தேவை அதிகரிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் இது குறித்து கூறுகையில், கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

impossible to send oxygen to Tamil Nadu: pinarayi Vijayan

இந்த எண்ணிக்கை வரும் மே 15ம் தேதிக்குள் 6 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தட்டுல தாளம் போட வெச்சாங்க.. சோறு கிடைக்காத நிலைமை வந்துருச்சு.. மோடி மீது கமல் கடும் தாக்கு தட்டுல தாளம் போட வெச்சாங்க.. சோறு கிடைக்காத நிலைமை வந்துருச்சு.. மோடி மீது கமல் கடும் தாக்கு

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். கேரளாவில் தற்போது தினமும் 219 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு தினமும் 40 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக அதிகரித்தால் கேரளாவுக்கு தினம் 450 டன் ஆக்சிஜன் தேவைப்படும். எனவே கேரளாவுக்கு கூடுதல் ஆக்சிஜன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளேன்' என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
As the demand for Kerala has increased, it has become impossible to send oxygen to other states, including Tamil Nadu and Karnataka. State Chief Minister pinarayi Vijayan has written a letter to Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X