• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமைன்னு கோவிலுக்கு போனா! பூனை கடிக்கு ஊசி போட சென்ற பெண்ணை.. துரத்தி கடித்த நாய்.. கேரளாவில் ஷாக்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பூனை கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பெண்ணை நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கேரளாவில் நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாய் வளர்ப்பு குறித்து சில முக்கிய அம்சங்களை அம்மாநில உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருந்தது.

இவ்வாறு இருக்கையில் வீட்டில் வளர்த்த பூனை தன்னை கடித்துவிட்ட நிலையில் அதற்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெண்மணி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு நாயும் அப்பெண்ணை கடித்துள்ளது.

மதில்மேல் “பூனை”யாக ரங்கசாமி.. புதுச்சேரி ஆட்சி “கவிழ்கிறதா”? பாஜக “வலை”! அமித்ஷாவை சந்திக்க திட்டம் மதில்மேல் “பூனை”யாக ரங்கசாமி.. புதுச்சேரி ஆட்சி “கவிழ்கிறதா”? பாஜக “வலை”! அமித்ஷாவை சந்திக்க திட்டம்

அந்நியர்கள்

அந்நியர்கள்

இந்தியா போன்ற பாரம்பரியம், பண்பாடுமிக்க நாடுகளில் நாய்கள் தெய்வமாகவும் வணங்கப்படுகின்றன. இவ்வாறு இருக்கையில் சமீப காலமாக நாடு முழுவதும் பரவலான இடங்களில் நாய் கடி தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெருநாய்கள் திருடனை பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் சோறு போட்டு வளர்த்தவர்களையே இரவு 10 மணிக்கு மேல் அந்நியர்களாகவே பாவித்து துரத்தி துரத்தி கடித்து வைத்து விடுகிறது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அதேபோல இரவு 10 மணிக்கு மேல் யாரையும் பைக்கில் செல்ல தெருநாய்கள் அனுமதிப்பதில்லை. நாய்கள் குறுக்கே வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னை வேறு எங்கு நடப்பதை காட்டிலும் கேரளாவில் அதிகம் நடைபெறுகிறது. நடப்பாண்டில் மட்டும் தற்போது வரை வெறிநாய் கடிக்கு 21 பேர் கேரளாவில் பலியாகியுள்ளனர். இதில் 12 வயது சிறுவன் ஒருவனும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனை கடி

பூனை கடி

இவற்றை கவனத்தில் கொண்ட உயர்நீதிமன்றம், தெரு நாய்களுக்கு யார் உணவு வைக்கிறார்களோ அவர்கள்தான் அந்த நாய்களுக்கு பொறுப்பு என்று கூறியது. நீதிமன்றத்தின் இந்த கூற்று பரவலாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆக நிலைமை இவ்வாறு இருக்கையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த அபர்ணா எனும் பெண் ஒருவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அபர்ணாவை கடித்ததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ரத்த காயம்

ரத்த காயம்

அப்போது சேரில் அமர்ந்து கொண்டிருக்கையில் அங்கிருந்த நாய் ஒன்று என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ தெரியவில்லை. திடீரென அபர்ணாவிடம் நெருங்கி வந்து அவரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் அபர்ணாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியுள்ளது. இதனையடுத்து அதே மருத்துவமனையில் அபர்ணா அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ல் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி நாய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Kerala, a dog chased and bit a woman who had come to get a cat bite vaccination. As the nuisance of dogs in Kerala is already on the rise, the state High Court has recently given some important guidelines on dog breeding. The woman came to the hospital to be vaccinated after being bitten by a domestic cat. Then a dog also bit the woman there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X