அச்சம் தேவையில்லை.. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்- கட்டுப்பாடுகள் அமல் ? சபரிமலை யாத்திரை?
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு, மரணங்களால் அச்சப்பட தேவையில்லை என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில் மட்டும்தான் என்கின்றன மத்திய அரசின் புள்ளி விவரங்கள்.

ஒப்பீட்டு அளவில் இந்தியாவின் 90% புதிய கொரோனா பாதிப்புகள் கேரளாவில்தான் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1296. கேரளா மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் மொத்தமே 470 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஆனால் தற்போதைய டிசம்பர் மாத தொடக்க 2 வாரங்களிலேயே இந்த பாதிப்பு எண்ணிக்கை 800ஐ கடந்தது.
கேரளாவில் தற்போது சபரிமலை யாத்திரைக்காக பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலில் கொரோனா பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த கொரோனா பாதிப்பு மிக அபாயகரமானது இல்லை; பொதுமக்கள் அச்சப்படவும் தேவை இல்லை எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துமா? அப்படியானால் தற்போதைய சபரிமலை யாத்திரையை எப்படி கேரளா அரசு ஒழுங்கு செய்யும் என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

கேரளாவில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். ஒருநாளைக்கு சுமார் 1 லட்சம் வரையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பக்தர்களின் அலைமோதும் கூட்டத்தை எதிர்பார்க்காத தேவசம் போர்டு நிர்வாகம் கடுமையாக திணறி வருவது அம்மாநிலத்தில் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications