ஜெயலலிதாவின் "கிருஷ்ணா".. கஜேந்திராவுக்கு நடக்கவே முடியல.. இவரெல்லாம் ஒரு மனிதரா? ஈரக்குலை நடுங்குது
திருவனந்தபுரம்: ஜெயலலிதா கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய கிருஷ்ணா யானையை கடுமையாக தாக்கியிருக்கிறார் அந்த பாகன்.. கஜேந்திர யானைக்கு நடக்கவே முடியவில்லையாம்.. இதைக்கேள்விப்பட்டு கேரளா மாநிலமே உறைந்து போயிருக்கிறது.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில்... நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்த கோயில்.. வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கிருஷ்ணா கோவிலுக்கு வந்து போவார்கள்.

குருவாயூர் கோயில்: இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன.. அனைத்து யானைகளும், இந்த கோவிலுக்கு பக்கத்திலேயே, பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கோயிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம்... அந்த சமயத்தில், யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிகளில் உலா நடத்தப்படும்.. நாடு முழுவதும் உள்ள ஏராளமான பிரபலங்கள் குருவாயூர் கோயிலுக்கு யானைகளை காணிக்கையாக தந்துள்ளனர்.
ஜெயலலிதா: அந்தவகையில், நம்முடைய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு யானை வழங்கியிருக்கிறார்.. அந்த யானையின் பெயர் கிருஷ்ணா. கடந்த 2001-ம் ஆண்டு இந்த கிருஷ்ணா யானை குட்டியை குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக தந்திருந்தார்.
இந்த சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே, யானைகள் தனியாக ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. புன்னத்தூர் யானைக்கோட்டம் என்கிற பகுதியில் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இதற்காகவே, 50-க்கும் மேற்பட்ட யானை பாகன்கள், உதவி பாகன்கள், சமையல் கலைஞர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருத்துவ பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார்களாம்.
3 யானைகள்: இப்படிப்பட்ட சூழலில், ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 3 யானைகளை, அங்கிருக்கும் பாகன், பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்.. 2 யானைகளையும் மூர்க்கத்தனமாக பாகன் தாக்கவும், அந்த யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறுகின்றன.. இதெல்லாம் வீடியோவாக வெளிவந்து சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது.. இதை பார்த்த பலரும் பதறிப்போனார்கள்.. கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்..
அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு உடனடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. இதற்கு பிறகு, இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தது.
யானைகள் அமைப்பு: இந்நிலையில், ஆசிய யானைகள் அமைப்பு சார்பில் சங்கீதா என்பவர் கேரளா ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில், யானைகளை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.. யானைகளை குச்சியால் பாகன் தாக்கப்பட்ட வீடியோவை பார்த்து, நீதிபதிகள் அதிர்ச்சியடைந்ததுடன், கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தனர்.
"யானைக்கோட்டத்தில் என்ன நடக்குது? யானைக்கோட்டத்தின் பொறுப்பாளர் யார்? பாகன்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றனர்.. அத்துடன், யானைக்கோட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆறுதல்: கோர்ட்டின் உத்தரவானது ஒருபக்கம் ஆறுதலை தந்துள்ளது என்றாலும், இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாகி இருக்கலாம் என்கிறார்கள்.. அதாவது, ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே, யானை பாகன்கள், யானைகளை இப்படித்தான் கொடுமைப்படுத்தி வந்திருக்கலாம் என்ற தகவல்கள் நடுங்க வைத்து வருகின்றன.
காரணம், ஜெயலலிதா தந்த கிருஷ்ணா, கேசவன் குட்டி, கஜேந்திரா உள்ளிட்ட யானைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அளவுக்கு அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.. இதில் கஜேந்திரா யானைக்கு காலில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறதாம். கஜேந்திராவால் நடக்கவே முடியவில்லையாம்.. இதெல்லாம் கேள்விப்பட்டு, பக்தர்கள் அப்படியே இடிந்து போயிருக்கிறார்கள்..!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications