கேரளா நடிகை பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம்: பிரபல நடிகைக்கு கடந்த 2017 ம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை எனக் கூற, மலையாள திரைப்பட நடிகர் திலீப்பை விடுதலை செய்த கேரள நீதிமன்றம், நடிகையின் முன்னாள் டிரைவர் சுனில் உள்பட ஆறு பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே பிரபல நடிகை படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பினார். அத்தாணி பகுதியில் அவரது கார் சென்றது. அப்போது அவரை ஒரு கும்பல வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது.

2 மணிநேரம் வரை நடிகையை காரில் வைத்து அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது. மேலும் அதனை செல்போனிலும் வீடியோவாக எடுத்துள்ளது அந்த கும்பல். இதுபற்றி நடிகை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகையிடம் டிரைவராக இருந்த சுனில் என்ற 'பல்சர்' சுனிலை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில், சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பிறகு சுனிலின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகைக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாகவும், இதனால் பின்னணியில் நடிகர் திலீப் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இதையடுத்து நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். மொத்தம் 10 பேர் கைது செய்பயப்ட்டனர். இதில் 2 மாத சிறை வாசத்துக்கு பிறகு நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை, எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 8 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஹனி எம் வர்க்கீஸ் தீர்ப்பு வழங்கினார். நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், போதிய ஆதாரம் இல்லாததால், நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். அதேபோல் வழக்கில் கைதான சார்லி தாமஸ், சனில் குமார் என்ற மேஸ்திரி சனில் மற்றும் சரத் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையில் நடிகையின் முன்னாள் டிரைவர் சுனில், மார்டின் அந்தோணி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்தது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக இந்தியச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடிகை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில அரசும், முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications