லட்சத்தீவு: பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
திருவனந்தபுரம்: லட்சத்தீவுகளுக்கான மத்திய அரசு அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற கோரி கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Recommended Video

சர்ச்சை நடவடிக்கைகள்
லட்சத்தீவுகளுக்கான மத்திய அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல். கடந்த சில மாதங்களாக லட்சத்தீவுகளில் கடும் நடவடிக்கைகளை பிரபுல் கோடா படேல் மேற்கொண்டு வருவதாக சர்ச்சை வெடித்துள்ளது.

மாட்டிறைச்சி தடை, மதுபான பார்கள் திறப்பு
கடலோர மக்களின் குடியிருப்புகள் அகற்றம், மதுபான பார்களுக்கு அனுமதி, மாட்டிறைச்சிக்கு தடை என வளர்ச்சியின் பெயரால் பல்வேறு நடவடிக்கைகளை பிரபுல் கோடா படேல் மேற்கொண்டு வருகிறார். இதற்கு லட்சத்தீவு பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

கேரளா சட்டசபை தீர்மானம்
மேலும் மத்திய அரசு அதிகாரி, பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று ஒரு தீர்மானம் தாக்கல் செய்தார்.

காவிமயமாக்குவதாக குற்றச்சாட்டு
அதில், லட்சத்தீவுகளில் அமல்படுத்தப்பட்ட புதிய நடவடிக்கைகளை உடனே திரும்பப் பெற வேண்டும்; லட்சத் தீவுகளில் காவிமயமாக்கல் அஜெண்டாவை பாஜக செயல்படுத்துகிறது. மத்திய அரசு அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. மேலும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கேரளா அரசு இருக்கும் என்றும் சட்டசபையில் பினராயி விஜயன் உறுதி அளித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications