கசக்கி குப்பையில் வீசிய லாட்டரிக்கு ரூ.1 கோடி.. கேரளா ஆட்டோ டிரைவருக்கு அடிச்ச அதிர்ஷடத்தை பாருங்க
திருவனந்தபுரம்: தனக்கெல்லாம் எங்கு லாட்டரியில் பரிசு கிடைக்கும் என நினைத்து வாங்கிய லாட்டரி சீட்டையும் கசக்கி குப்பையில் எறிந்த ஆட்டோ டிரைவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்த அதிர்ஷடக்கார ஆட்டோ டிரைவருக்கு பரிசு அடித்தது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் பக்கத்து மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும்.

கேரளாவில் கடந்த ஓணம் பம்பர் லாட்டரியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை அடித்தது. அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்பது தெரியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளா லாட்டரியில் அடிக்கடி பரிசு விழுவது பற்றிய பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி வருகிறது. கூலித்தொழிலாளிக்கு ஒரு கோடி பரிசு விழுந்தது. ரிக்ஷா ஒட்டுநருக்கு பல லட்சம் பரிசு விழுந்தது.
அதிர்ஷ்டம்: கடன் வாங்கிய காசில் வாங்கிய லாட்டரிக்கு கோடியில் பரிசு விழுந்தது என்று பல முறை கேள்விபட்டிருப்போம். பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கி ஒரு ருபாய் கூட பரிசு அடிக்காத நபர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.. அதேவேளையில், எதார்த்தமாக வாங்கிய ஒரே லாட்டரி கூட சிலரை கோடிஸ்வரர் ஆக்கி விடுகிறது.
இந்த நிலையில், கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் தனக்கெல்லாம் எங்கு அதிர்ஷம் அடிக்க போகிறது என்ற எண்ணத்தில் வாங்கிய லாட்டரியை வீட்டுக் குப்பை தொட்டியில் வீசியிருக்கிறார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்ட தேவதை வரம் கொடுத்து கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. குப்பையில் வீசிய லாட்டரிக்கு ரூ.1 கோடி கிடைத்தது என்பது குறித்த செய்தியை இங்கே பார்க்கலம்.
ஆட்டோ டிரைவர்: கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் மூல வட்டம் பகுதியை சேர்ந்த சுனில் குமார்(வயது 53.) ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில், புதன்கிழமை வெளியாகும் 50:50 லாட்டரியை ரூ.50 கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்த லாட்டரிக்கு முதல் பரிசு ரூ.1 கோடியாகும். இந்த லாட்டரிக்கான குலுக்கல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது.
குப்பையில் வீசினார்: லாட்டரியை வாங்கியிருந்த சுனில் குமாருக்கோ நமக்கெல்லாம் எங்கே அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்ற எண்ணத்தில், தன்னிடம் இருந்த லாட்டரியை வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் கசக்கி எறிந்து உள்ளார். பின்னர் வழக்கம் போல ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். இருந்தாலும் லாட்டரியில் குலுக்கல் முடிந்து முதல் பரிசுக்கான லாட்டரி எண் ak 633063 அறிவிக்கப்பட்டதை அறிந்த சுனில் குமாருக்கு... மனதிற்குள் ஒருவேளை நமக்கு பரிசு அடித்து இருக்குமோ என்ற எண்ணம் ஓடிக் கொண்டு இருந்துள்ளது.
ஒரு கோடி பரிசு: இதனால், வீட்டிற்கு சென்றதும் குப்பை தொட்டியை அலசி ஆராய்ந்து தூக்கி எறிந்த லாட்டரியை ஒரு வழியாக கண்டுபிடித்தார். லாட்டரியில் உள்ள நம்பரை பார்த்த போது ஒரு நிமிடம் மயக்கமே வந்து விட்டதாம்... தனக்கு எங்கே பரிசு அடிக்க போகிறது என நினைத்த சுனில் குமாருக்கு முதல் பரிசான ஒரு கோடி விழுந்து இருக்கிறது. ஆம் ak 633063 என்ற எண்ணுக்கு தான் ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது.
புது வீடு கட்ட திட்டம்: இதனால் மகிழ்ச்சியின் எல்லைகே சென்ற சுனில் குமார்... நல்ல வேலை கிழித்து போடவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கார். வரிப்பிடித்தம் போக மீதமுள்ள தொகை அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகையை வைத்து அடமானம் வைத்த வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாக ஹேப்பியாக சொல்லி வருகிறார் சுனில் குமார்..
-
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications