கேரளா குண்டு வெடிப்பு- பலி 3 ஆக அதிகரிப்பு- மத்திய அமைச்சர் ராஜீவ் மீது நடவடிக்கை- பினராயி விஜயன்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா களமச்சேரி குண்டு வெடிப்பு தொடர்பாக மத அடிப்படையிலான விமர்சனங்களை முன்வைத்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கமளச்சேரியில் நேற்று கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் 3 முறை குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Kerala bomb Blast: Death toll rises to 3- All Party meet today

டொமினிக் மார்ட்டின்: இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் பிரார்த்தனை கூட்டட்தை ஏற்பாடு செய்த Jehovah Witnesses group தேசவிரோதிகள் எனவும் அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் குற்றம்சாட்டியிருந்தார்.

20 பேர் குழு விசாரணை: இதனையடுத்து கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) இந்த விசாரணையை நடத்த உள்ளது. மேலும் கேரளா மாநில அரசும் 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் விசாரணைக்காக அமைத்துள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மத்திய அமைச்சரின் கடும் விமர்சனம்: இதனிடையே கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதள்ப் பக்கங்களில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ்- சிபிஎம் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல்தான் இத்தனைக்கும் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பாஜக தலைவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கேரளாவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டன. கேரளாவில் தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த பேரணி ஒன்றில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் சர்வதேச தலைவரான காலிம் மஷால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றியதை தொடர்ந்து இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை: மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்களின் இந்த விமர்சனங்கள்ளுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜக தலைவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

அனைத்து கட்சிக் கூட்டம்: இதனிடையே கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விவாதிக்க இந்தக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் கூட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+