பெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு ஆபாச ஸ்டிக்கரை வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேரளா ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்தி அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அனுப்பிய படத்தின் ஸ்க்ரீன் ஷாட்களும் தற்போது வைரலாகியுள்ளன.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் பிரகாஷ் என்பதாகும். இவர் கேரள படகு மற்றும் இன்லாண்ட் நேவிகேஷன் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்துள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆழ்கடல் மீன்பிடித்தல் தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் இந்த ஆண்டு துவக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தம் குறித்து பினராயி விஜயன் அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த சர்ச்சைக்கு பதில் கேட்டு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த்தை அலுவல் ரீதியாக அணுகினார். போனில் அழைத்தபோது அவர் பதிலளிக்காத காரணத்தால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
வாட்ஸ் அப்பில் தன்னை ஒரு பத்திரிகையாளர் என அறிமுகப்படுத்தி கொண்ட செய்தியாளர், புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய செய்தியைப் பற்றி பேசுவதற்கு சரியான நேரமா? உங்கள் கருத்து என்ன என கேட்டார்.
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வெறும் ஸ்டிக்கரை அவருக்கு ரிப்ளை செய்துள்ளார். அதற்கு அந்த செய்தியாளர், இந்த கேள்வி உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல, சர்ச்சை குறித்து பதிலளிக்க முடியுமா என பத்திரிகையாளர் மீண்டும் கேட்டுள்ளார்.
அப்போது ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி. அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளார் என்னவிதமான ஸ்டிக்கர் இது என கேள்வியெழுப்பியபோது மற்றொரு ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார். அது அந்த பெண் பத்திரிகையாளரை கடுமையாக பாதித்தது. இதனைத் தொடர்ந்து, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் பினராயி விஜயனிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரியின் செயலுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது பெண்களுக்கு எதிராக, அவர்களின் பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக திட்டுதல், மொபைல் போன் வழியாக ஆபாச படங்களையும், செய்திகளையும் பதிவிடுதலுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 -ன் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தகுந்த சட்ட ஆலோசனை பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications