Bumper Lottery Result: கேரள லாட்டரியில் 20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்? எந்த ஊரில் பரிசு விழுந்து இருக்கு பாருங்க
திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அடித்துள்ளது. இந்த டிக்கெட்டை கோட்டயத்தில் உள்ள ஏ. சுதீக் என்ற லாட்டரி முகவர் விற்றுள்ளார். காஞ்சிரப்பள்ளியில் உள்ள நியூ லக்கி சென்டரில் தான் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது. முதல் பரிசு அடித்ததற்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் சுதீக் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அடித்துள்ளது. இந்த டிக்கெட் எந்த ஊரில் விற்பனை செய்யப்பட்டது எந்த ஏஜென்சியில் விற்கப்பட்டது? எப்போது விற்கப்பட்டது என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நபருக்கு ரூ.20 கோடி அடித்ததா
கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற குலுக்கலில் பரிசு வென்ற அதிர்ஷ்ட எண்கள் வெளியாகின.
இதன்படி முதல் பரிசு முதல் பரிசாக ரூ.20 கோடி டிக்கெட் எண் XC 138455 வென்றது. பரிசை கோட்டயத்தில் உள்ள ஏ. சுதீக் என்ற லாட்டரி முகவர் விற்றுள்ளார். காஞ்சிரப்பள்ளியில் உள்ள நியூ லக்கி சென்டரில் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றியாளர் அப்பகுதியை சேர்ந்தவராகத்தான் இருக்கும் என்று கேரள சேட்டன்கள் கூறி வருகிறார்கள்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பரிசு வென்ற லாட்டரியை விற்பனை செய்த சுதிக் கூறுகையில், " இந்த டிக்கெட்டை நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே விற்பனை செய்தேன். ஆனால் வாங்கியவர் யார் என்று நினைவு இல்லை. நான் கடந்த 35 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறேன். மூன்று வருடத்திற்கு முன்னால் ஒணம் பம்பரில் 2 வது பரிசு எனது கடையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு அடித்தது" என்றார்.
தனது கடையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் என்பதால், அதற்கான கமிஷன் தொகையும் அவருக்கு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுதிக் இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் கண்டறியமுடியவில்லை.
அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாமல்
அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாளில் பரிசு வென்றவர் பரிசுத்தொகையை உரிமை கோர வாய்ப்புள்ளதாகவும் கேரள லாட்டரி வியாபாரிகள் கூறினார். பரிசு அடித்தவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதால் பெரும்பாலானவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்புவது இல்லை என்றும் இதனால் ரகசியமாகவே வாங்கி செல்லவும் வாய்ப்பு உள்ளதாகவும் லாட்டரி விற்பனையாளர்கள் கூறினர்.
வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலரும் இங்கு வந்து ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் வாங்குவதால் அவர்களுக்கு கூட அடித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் இன்னும் ஒரு சில நாட்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது தெரிந்துவிடும் என்பதால் கேரள சேட்டன்கள் அதிர்ஷ்டசாலியை யார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பரிசுத் தொகையினை எப்படி பெற வேண்டும்
கேரள லாட்டரி டிக்கெட் முடிவுகளை லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான வலைத்தளங்களான https://www.keralalotteryresult.net/ மற்றும் http://www.keralalotteries.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். லாட்டரி தொகை 5 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மாவட்ட லாட்டரி அலுவலகத்திலோ அல்லது வங்கி மூலமாக பரிசுத்தொகையை உரிமை கோர வேண்டும்.
5 ஆயிரத்திற்கும் குறைவான பரிசுத்தொகை என்றால் கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு லாட்டரி கடையில் பரிசுத்தொகையை கோரலாம். பரிசு வென்ற 30 நாட்களுக்குள் அசல் டிக்கெட்டை காண்பித்து பரிசுத்தொகையை பெறலாம். 10 லட்சம் வரையிலான பரிசுத்தொகையை மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் பெறலாம். அதற்கு மேல் உள்ள பரிசுத்தொகை என்றால் மாநில லாட்டரி இயக்குநரகத்தில் மட்டுமே பெறலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications