"நிர்வாணம்".. கல்லூரிக்கு அருகே கிடந்த பெண்ணின் உடல்.. ஒரே ஒரு போனால் குழம்பிய போலீஸ்.. யாருங்க அது?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் கோட்டம்கரா பகுதியை சேர்ந்தவர் அந்த பெண். 32 வயதாகும் அந்த பெண் கடந்த டிசம்பர் 29ம் தேதி காணாமல் போய்விட்டார்.
வீடு வீடாக சென்று அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் பணியை இவர் செய்து வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 29ம் தேதி வேலைக்கு போனவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

பீச்
அருகில் இருக்கும் பீச் ஒன்றிற்கு சென்றுவிட்டு கொஞ்சம் லேட்டாக வருவதாக இவர் தனது அம்மாவிற்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. பின்னர் போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை சில பீச்சில் பார்த்ததாக கூறி இருந்தனர். அந்த பெண்ணின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து குந்தரா போலீசார் குற்றச்சாட்டை பதிவு செய்துவிட்டு அந்த பெண்ணை தேடி உள்ளனர். 6 நாட்களாக அந்த கிடைக்கவே இல்லை.

காணவில்லை
இந்த நிலையில் அதே குந்தரா பகுதி போலீசார்.. புத்தாண்டு அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சாலையில் இரவில் தனியாக சென்ற சந்தேகத்திற்கு உரிய நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவரிடம் இரண்டு போன் இருந்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் நடந்த விசாரணையில் இந்த போன் உங்களிடம் எப்படி வந்தது.. ஏன் இரண்டு போன்.. ஏன் இது ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இதை திருடினாயா என்று விசாரித்து உள்ளனர்.

போன்
அதற்கு அந்த இளைஞர்.. நான் திருடவில்லை.. இது ரோட்டில் கிடந்தது. எடுத்த போதே ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. சார்ஜ் போட்டு, போன் செய்து ஓனர் யார் என்று கண்டுபிடித்து கொடுக்கலாம் என்று இருந்தேன் என்று கூறி உள்ளார். போலீசார்.. அந்த வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி, போனை அவரும் இருந்து வாங்கிவிட்டு, அவரின் விவரங்களை மட்டும் கேட்டுவிட்டு அங்கிருந்து அவரை அனுப்பி உள்ளனர். இந்த நிலையில்தான் அந்த போனில் இருந்த நம்பர்களுக்கு நேற்று காலை போலீசார் போன் செய்து பார்த்துள்ளனர்.

கொலை
அப்போது அந்த போன் காணாமல் போன அந்த 32 வயது பெண்ணின் போன் என்று தெரிய வந்துள்ளது. அவரின் உடல் ஆடையின்றி நிர்வாணமாக கிடந்துள்ளது. அது ஒரு பழைய, ஆட்கள் இல்லாத குடியிருப்பு ஆகும். இன்னொரு பக்கம் போலீசாருக்கு அதே நாளில் கட்டுப்பாட்டு அறையில் இன்னொரு போனும் வந்துள்ளது. அதில் பாத்திமா கல்லூரி அருகே பிணம் கிடப்பது போன்ற நாற்றம் வருகிறது என்று இரண்டு மாணவர்கள் புகார் கொடுத்ததாக கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கே பெண்ணின் உடல் கிடைத்துள்ளது. இந்த உடலை சோதனை செய்ததில் அது காணாமல் போன 32 வயது பெண்ணின் உடல் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

என்ன நடந்தது?
அந்த பெண்ணின் தாயார் உடலை அடையாளம் கண்டு அதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவரின் போனை வைத்து இருந்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போன் எப்படி வந்தது.. உண்மையில் அவர் போனை தரையில் இருந்து எடுத்தாரா? அந்த இளைஞர் உண்மையில் யார்? அவருக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதா? அவர்தான் கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் இந்த சிக்கலான கொலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications