விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்?.. கேரளா விஸ்மயா மரணத்தில் ஷாக் திருப்பம்.. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!
திருவனந்தபுரம்: கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பலியான விஸ்மயா விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது பெண் நேற்று அவரின் கணவர் கிரண் குமார் வீட்டில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். வரதட்சணை கொடுமை காரணமாக இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
10-20 லட்சம் ரூபாய் கூடுதலாக வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் கொடுமை படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடல் முழுக்க காயத்தோடு மரணத்திற்கு முன் விஸ்மயா அனுப்பிய வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் கேரளாவை உலுக்கி உள்ளது.

கேரளா
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண் குமார் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் இவர் சிறையில் உள்ளார். திங்கள் கிழமை இவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் மீது கொலை வழக்கு பதியும் திட்டம் உள்ளது.

திருவனந்தபுரம்
இன்னொரு பக்கம் விஸ்மயாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. முதலில் இவரின் உடலில் ஏற்பட்ட காயங்களை வைத்து இவர் மோசமாக தாக்கப்பட்டதால் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதன்பின் கழுத்தில் இருந்த சில காயங்களை வைத்து, இவர் தூக்கு மாட்டி செய்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

சோதனை
அதேபோல் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கு மாட்டி இறந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை. ஏனென்றால் கழுத்து தூக்கு மாட்டியதற்கான உறுதியான ஆதாரங்கள், வெட்டுகள் இல்லை. இதனால் மீண்டும் உடலை சோதனை செய்தனர்.

தூக்கு
இதில் உடலில் உயிரை கொல்லும் அளவிற்கு காயம் எதுவும் இன்றி விஸ்மயா மரணம் அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலும் விஸ்மயா விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷம் காரணமாக விஸ்மயா பலியாகி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.,

விஸ்மயா
இதனால் விஸ்மயாவின் உடல் உள் உறுப்புகளை விஷ பரிசோதனை செய்ய அனுப்பி உள்ளனர். சில இடங்களில் உறுப்புகள் அழுகி போனதற்கான ஆதாரங்கள் இருப்பதால் இது விஷமாக இருக்கும் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். திங்கட்கிழமை கிரண் குமாரை போலீசார் கஸ்டடியில் எடுக்க உள்ளனர். இதனால் அன்று விஸ்மயா மரணம் குறித்த தெளிவு பிறக்கும் வாய்ப்புள்ளது.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications