'சைலண்ட்' வாக்குகள்! இனி மாநாடுகள் போட்டு பயனில்லை.. கேரளாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்றைய தினம் சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், அதில் ஆச்சரியம் தரும் வகையில் 78% வாக்குகள் பதிவானது. அங்கு இந்தளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதே இப்போது பெரிய விவாதமாக எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் கேரளாவில் உள்ள அரசியல் சூழல் தொடர்பாகவும் நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. கேரளாவில் வழக்கமாக ஒருமுறை இடதுசாரி (LDF), அடுத்த முறை காங்கிரஸ் (UDF) என ஆட்சி மாறும். ஆனால், கடந்த முறை அந்த வரலாற்றை மாற்றியெழுதினார் பினராயி விஜயன். இப்போது 2026ல் 'ஹேட்ரிக்' அடிக்க இடதுசாரிகள் துடிக்கிறது. மறுபுறம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வரக் காங்கிரஸ் போராடுகிறது.

நேற்று (ஏப்ரல் 9) நடந்து முடிந்த தேர்தலில் பதிவான 78.2% வாக்குகள் யாருடைய தலையெழுத்தை மாற்றப்போகிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மாநாடுகள் முக்கியமில்லை
தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் பிரம்மாண்டப் பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதைப் பார்த்து வெற்றி உறுதி எனச் சொல்ல முடியாது. நமது நாட்டில் கூடும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. எனவே, கேரளாவில் பொதுக் கூட்டங்களில் கூடிய மக்கள் கூட்டம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது.
கேரளாவைப் பொறுத்தவரை, அங்கு மக்கள் மிகவும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள். பேரணிக்கு வருபவர்கள் அதே கட்சி தான் வாக்களிப்பார்கள் எனச் சொல்ல முடியாது. இந்தச் சூழலில் தான், நேற்று பதிவான அந்த 78.27% வாக்குகளில் கவனம் ஈர்க்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களிடையே 80.8% இது இன்னுமே அதிகமாகவே இருக்கிறது. இந்த வாக்கு ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையா அல்லது ஆதரவானதா என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது.
வாக்குகள்
அங்குக் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகள் எப்போதுமே வெற்றியைத் தீர்மானிக்கும். இந்த முறை கிறிஸ்தவ சமூகத்தின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக மத்திய கேரளாவில் இவர்களின் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கே சாதகமான ஒரு போக்காகப் பார்க்கப்படுகிறது.
கேரளாவில் மாநில சராசரி வாக்குப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தாலும், பிராந்திய வேறுபாடுகளே உண்மையான நிலவரத்தைக் காட்டுகின்றன. குறிப்பாக வட கேரள மாவட்டங்களான கண்ணூர், கோழிக்கோட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அங்குத் தொண்டர்களைத் திரட்டி வந்து வாக்களிக்கும் முறையே இதற்குக் காரணமாக இருக்கிறது. அதேநேரம், திருச்சூர் உள்ளிட்ட மத்திய கேரளாவில், எஸ்ஐஆர் தொடர்பான விவாதம் வாக்குப்பதிவு அதிகரிக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.
எது முக்கியம்
பேரணிகளும் பிரச்சாரங்களும் கேரளாவில் ஒரு இமேஜ்ஜை கொடுத்தாலும் கூட அது அமைதியான நடுநிலை வாக்காளர்களைப் பெரியளவில் சென்றடைவதில்லை. மைக் சத்தங்களைத் தாண்டி, உள்ளூரில் வார்டு அளவில் நடக்கும் களப்பணிகளே அவர்களைச் சென்றடைகிறது. எனவே, இந்த முறை காங்கிரஸ் எழுச்சி இருக்குமா அல்லது இடதுசாரிகளின் ஹாட்ரிக் இருக்குமா என்பதை பூத் ஏஜெண்டுகளும் கடைசிக் கட்ட கள பணியாளர்களுமே முடிவு செய்வார்கள்.
தேர்தல் முடிவுகள்
கேரளா, புதுச்சேரி, அசாமில் வாக்குப்பதிவு முடிந்தாலும் தேர்தல் முடிவுகளுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தோடு இணைந்து வரும் மே 4-ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது தான் அரசியல் கட்சிகள் நடத்திய பிரம்மாண்டப் பேரணிகள் வெறும் 'ஷோ' தானா அல்லது அவை வாக்குகளாக மாறியுள்ளதா என்பது தெரிய வரும்
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications