காங்கிரஸின் ஒரே நம்பிக்கையிலும் ஆப்பு.. கேரளா சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! என்ன இப்படி ஆகிடுச்சு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு எந்த கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக புதிய சர்வே வெளியாகியுள்ளது. அதில் இடதுசாரி கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

கேரளாவில் இப்போது பிரனாயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே அங்கு பிரனாயி விஜயன் அரசே உள்ள சூழலில், பிரனாயி விஜயன் அரசு மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்த முறை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இறங்குகிறது. இதனால் அங்குப் போட்டி கடுமையாக உள்ளது.

Kerala Election opinion Poll LDF 61-71 Seats Edges UDF 58-69 in Tight 140-Seat Race says IANS survey

கேரளா சர்வே

இதற்கிடையே கேரளா தேர்தல் தொடர்பாக புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. மாட்ரிஸ்- ஐஏஎன்எஸ் (Matrize-IANS) கருத்துக் கணிப்பின்படி, கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 71 இடங்களில் வெல்லும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (LDF) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடையே கடும் போட்டி நிலவும். அதில் தற்போதைய சூழலில் இடதுசாரி கூட்டணிக்குச் சற்று முன்னிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் போட்டி

இந்த சர்வேயின்படி, இடதுசாரி கூட்டணி 61 முதல் 71 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 69 இடங்களையும் பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே உள்ள சூழலில், தேர்தல் எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்றே தெரிகிறது.

வாக்கு வங்கியைப் பொறுத்தவரை இடதுசாரி கூட்டணி 42-43% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி 41-42% வாக்குகளைப் பெறும் என கூறப்பட்டுள்ளது. மறுபுறம் என்டிஏ கூட்டணி 12- 13% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் இடதுசாரி கூட்டணிக்கு முன்னிலை இருந்தாலும், கடைசிக்கட்ட பிரச்சாரம் தேர்தலை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றும் என்றே அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த தேர்தல்

கேரளாவில் கடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 99 இடங்களில் வென்றது. குறிப்பாக சிபிஎம் 75 இடங்களிலும், சிபிஐ 17 இடங்களிலும் வென்றன. மற்ற இடங்களில் இதர சிறிய கட்சிகள் வென்றன. அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் வென்றன. அதிலும் காங்கிரஸ் வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 15 இடங்களில் வென்றது. பாஜக 11% வாக்குகளைப் பெற்றாலும் கூட ஒரு இடத்திலும் வெல்லவில்லை.

கேரளா தேர்தல்

இந்த முறை கேரளாவில் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உடன் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பிரனாயி ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகமாக உள்ள சூழலில், கடந்த முறையைப் போல இந்த முறை இடதுசாரிகளால் ஈஸியாக வெல்ல முடியாது. போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+