திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் துணை நிற்போம் - பினராயி விஜயன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கைகொடுக்கும் கேரளா!- வீடியோ

    திருவனந்தபுரம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் துணை நிற்போம் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்

    கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்திற்கு கேரளா உதவிக் கரம் நீட்டியுள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

    Kerala extends aid to Cyclone hit TN

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில் தெரிவித்துள்ளதாவது:

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் பக்கத் துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவுப் பொருட்கள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும். கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தபோது தமிழக மக்கள் பெரும் திரளாக திரண்டு சென்று உதவினர். தற்போது தமிழகத்திற்கு கேரளா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

    English summary
    Kerala CM Pinarayi Vijayan has extended his help to the Cyclone hit TN districts. He has said that his state will stand alongside with the people of Tamil Nadu who are recovering from the havoc caused by Gaja cyclone. Drinking water, tarpaulins, candles, dried food items & new clothes will be delivered to Thiruvarur & Nagapattinam districts of TN. KSDMA will coordinate these efforts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X