இறந்த மூதாட்டியுடன் சிரித்தபடி குரூப் போட்டோ.. கடும் விமர்சனம்.. பின்னணியில் உள்ள ‛அடடே’ காரணம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இறந்துபோன மூதாட்டியின் உடலை சுற்றி நின்று குடும்பத்தினர் சிரித்த முகத்துடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் அதுபற்றி குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுவாக ஒரு குடும்பத்தில் யாராவது இறந்தால் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்துடன் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ வேகமாக பரவி வருகிறது. அதாவது இறந்துபோன மூதாட்டியின் உடல் கண்ணாடி பெட்டியில் இருக்கும் நிலையில் அவரை சுற்றி குடும்பத்தை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்தபடி இருக்கின்றனர்.

இந்த போட்டோ தற்பாது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது. துக்க வீட்டில் குடும்பத்தினர் சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துள்ளதாக கூறி நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எதற்காக நடந்தது? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:

கேரளா குடும்பம்

கேரளா குடும்பம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லபாலி கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மா (வயது 95). இவருக்கு மொத்தம் 9 குழந்தைகள் பிறந்தன. தற்போது அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளுக்கு பேரன், பேத்திகள் அதிகமாக உள்ளனர். இதனால் குடும்பம் மிகப்பெரியதாக உள்ளது.

இறந்து போன மூதாட்டி

இறந்து போன மூதாட்டி

இந்நிலையில் தான் மாரியம்மா வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் ஆகஸ்ட் 17 ம் தேதி இறந்தார். இதையடுத்து அவரது குடும்ப பாரம்பரியப்படியம் கிறிஸ்தவ முறைப்படியும் இறுதி சடங்குகள் நடந்தன. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றனர்.

குரூப் போட்டோ எடுத்த குடும்பம்

குரூப் போட்டோ எடுத்த குடும்பம்

இந்நிலையில் தான் இறுதி சடங்கு வேளையில் கண்ணாடி பெட்டியின் உள்ளே மாரியம்மாவின் உடல் இருக்க குடும்பத்தினர் அதனை சுற்றி அமர்ந்து சிரித்த முகத்தோடு போட்டோ எடுத்தனர். இதில் அவரது மகன், மகள், மருமகன், மருமகள்கள், பேரன், பேத்திகள் உள்பட அனைவரும் உள்ளனர். இந்த போட்டோ தான் இணையதளங்களில் பரவி விமர்சனத்தோடு, விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தற்போது மாரியம்மாவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

குடும்பத்தினர் விளக்கம்

குடும்பத்தினர் விளக்கம்

இதுபற்றி குடும்பத்தினர் கூறுகையில், ‛‛வாழும் காலத்தில் அவர் நிறைய அன்பை கொடுத்து எங்களை மகிழ்ச்சியாக வாழ வைத்தார். அவரையும் மகிழ்ச்சியாக வைத்து கொண்டோம். இதனால் அவருக்கு மகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுக்க வேண்டும் என நினைத்தோம். இதனால் தான் இவ்வாறு போட்டோ எடுத்து கொண்டோம். எங்களின் நினைவுக்காக எடுத்த படம் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. இது பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த போட்டோ தவறான நோக்கத்துக்காக எடுக்கப்படவில்லை'' என கூறியுள்ளனர்.

கேரள அமைச்சர் கோரிக்கை

கேரள அமைச்சர் கோரிக்கை

இதுபற்றி கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஒவ்வொரு மரணமும் வேதனையானது. இது ஒருவர் குடும்பத்தை விட்டு விடைபெறும் வகையில் உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒருவர் புன்னகையுடன் விடைபெறுவதை விட சிறந்ததாக வேறு என்ன இருக்க முடியும்?. இதற்கு எதிர்மறையான கருத்துகளை பதிவிடுவதை தவிரக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+