Kerala: ”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” கிணற்றில் தவறி விழுந்த குழந்தை! யோசிக்காமல் தந்தை செய்த காரியம்
திருவனந்தபுரம் (Kerala): "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..." என்ற வரிகளுக்கு ஏற்றாற் போல கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிள்ளைக்கு ஒன்று என்றால் உடனே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுவார்கள். அப்படித்தான், கோட்டயம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை, அடுத்த நொடியே கிணற்றில் குதித்து குழந்தையை மூழ்க விடாமல் தடுத்து காப்பாற்றினார் அந்த தந்தை.
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே" என்ற வரிகளுக்கு ஏற்றாற் போல கேரளாவில் நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளை கிணற்றில் தவறி விழுந்த அடுத்த நொடியே தானும் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை
கேரள மாநிலம் கோட்டயம் கடுதுருத்தி மாத்தூரை சேர்ந்தவர் சிரில். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், நேற்று முன்தினம் தனது மகள் லெனட் (வயது 2), மாமனார் சிரியக் ஆகியோருடன் வாடகைக்கு வீடு பார்க்க திருவல்லா சென்றார். அங்கு ஜெரின் என்பவருடைய வீட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டு முற்றத்தில் விளையாடிய குழந்தை லெனட், அருகில் இருந்த கைப்பிடி இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த சிரில், சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்றினார். பழமையான குறுகிய கிணறாக இருந்ததால் இருவரும் மேலே வர முடியாமல் தவித்தனர்.
தந்தையின் துரிதமான நடவடிக்கையால்
இதனைத் தொடர்ந்து திருவல்லா தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த தந்தை, மகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் ஏணிப்படி மூலம் இறங்கி, வலையைத் தொட்டி பயன்படுத்தி இருவரையும் மீட்டனர். தந்தையின் துரிதமான செயல்பாட்டால் 2 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
இது தொடர்பான காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றதும் தன் உயிரைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் கிணற்றில் குதித்து மகளை காப்பாற்றிய தந்தை சிரிலின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நெட்டிசன்கள் பாராட்டு
"தாய் பிள்ளையை வயிற்றில் சுமந்தார் என்றால், தந்தை வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பார்" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்து இருப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், குழந்தைகளை புதிய இடத்திற்கு அழைத்து செல்லும் போது எப்போதும் கவனமாக வைத்து இருக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் அறிவுரையும் கூறி பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "விவரம் தெரியாத குழந்தைகளுக்கு புதிய இடத்தை பார்த்ததும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாட பார்க்கும். எனவே, புதிய இடங்களில் எங்கு ஆபத்து இருக்காது என்று பெற்றோர்களுக்கே தெரியாது என்பதால் மிகவும் உஷாராக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications