திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த ட்ரெஸ்ஸை பாருங்க.. கேரள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு neutral யூனிபார்ம்- தமிழ்நாட்டில் சாத்தியமா

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் அரசு பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு gender neutral சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மாணவிகள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு போலவே கேரளாவில் பல முன்னோடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது. வீடு தேடி மதிய உணவு வழங்குவது தொடங்கி முற்போக்கான திட்டங்கள் பல கேரளாவில் கொண்டு வரப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சமீப காலமாக அரசு பள்ளிகளில் gender neutral சீருடை கொண்டு வரப்படுகிறது. அதாவது, ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சீருடை!

பள்ளிகள்

பள்ளிகள்

பல மாநிலங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கு பேண்ட், ஷர்ட், சிறுவருக்கு கால் சட்டை, சட்டை வழங்கப்படும். மாணவிகளுக்கு சுடிதார், கோட். சிறுமிகளுக்கு கவுன் போன்ற உடை மற்றும் கோட் வழங்கப்படும். தமிழ்நாட்டிலும் இதுவே வழக்கமாக உள்ளது. இந்த நிலையில்தான் கேரளாவில் பள்ளிகளில் இருபாலினருக்கும் சமமான gender neutral சீருடை வழங்கப்பட்டு வருகிறது.

எந்த பள்ளி

எந்த பள்ளி

அந்த வகையில் நேற்று பாலுசேரி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் gender neutral சீருடை வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் இருவரும் நீல நிற பேண்ட் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பேண்ட், ஷர்ட் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவிகள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாணவிகள் பலரும் இதை பாராட்டி உள்ளனர்.

மாணவிகள் வரவேற்பு

மாணவிகள் வரவேற்பு

எங்களுக்கு இந்த உடை எளிமையாக இருக்கிறது. அணிந்து கொள்ள எளிமையாக உள்ளது. அதேபோல் பள்ளி வர, சைக்கிள் ஓட்ட நன்றாக இருக்கிறது. சுடிதார் அணிந்த போது காற்றில் பறக்குமோ என்ற அச்சம் இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. உடை மிகவும் சவுகரியமாக இருக்கிறது என்று பெண்கள் கூறியுள்ளனர். மற்ற சில பள்ளிகளிலும் இதே நடைமுறை வர தொடங்கி உள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிராக அந்த பள்ளி வாசல் முன் போராட்டம் நடத்தி உள்ளனர். பெண்களுக்கு இப்படி உடை கொடுக்க கூடாது. அவர்களின் உடை உரிமையை இது பறிக்கிறது. 200கும் மேற்பட்ட ஆண்கள் படிக்கும் பள்ளியில் இப்படி உடை வழங்குவது தவறு என்று இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆதரவு

ஆதரவு

ஆனால் அம்மாநில சிபிஎம் அரசு இதை ஆதரித்துள்ளது. அந்த பள்ளியின் முடிவு சரிதான். மாணவிகள் இப்படி உடை அணிவது முற்போக்கான விஷயம். அவர்களுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும். அந்த பள்ளியின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர் பிந்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சாத்தியமா

தமிழ்நாட்டில் சாத்தியமா

இந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் தமிழ்நாட்டில் பள்ளிகளில் இது சாத்தியப்படுத்தப்பட வேண்டும். நாமும் இப்படி முற்போக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். மக்கள் இதை வரவேற்பார்கள் என்று கூறி உள்ளனர்.

English summary
Kerala government school brings gender neutral uniform for girls: Students welcome the move
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X