திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க ஒன்னாதான் இருப்போம்.. டெல்லி பத்திரிக்கைகளில் கேரளா அரசின் விளம்பரம்.. மத்திய அரசுக்கு மெசேஜ்!

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், மத்தியில் இருக்கும் பாஜக தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் கேரளா மாநில அரசு டெல்லி பத்திரிக்கைகளில் விளம்பரங்களை வெளியிட்ட

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், மத்தியில் இருக்கும் பாஜக தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் கேரளா மாநில அரசு டெல்லி பத்திரிக்கைகளில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சிஏஏ சட்டத்தை கேரளா அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

புது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க!புது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க!

வெள்ளம்

வெள்ளம்

இதனால் தற்போது கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்க மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. மொத்தம் 7 மாநிலங்களிலும் 6000 கோடி ரூபாய் பிரதமர் மோடி மூலம் திறந்து விடப்பட்டுள்ளது . ஆனால் அதில் கேரளா இடம்பெறவில்லை.

கேரளா வெள்ளம்

கேரளா வெள்ளம்

கேரளாவில் கடந்த இரண்டு வருடமாக வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இதனால் உடமைகளை இழந்தனர். ஆனால் இதற்காக ஒரு ரூபாய் கூட இந்த நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படவில்லை.

சீண்டியது

இதையடுத்து மத்திய அரசை சீண்டும் வகையில் கேரள அரசு சார்பாக டெல்லி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் வெளியாகும், ஆங்கில பத்திரிக்கைகளில் மட்டும் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில், கேரளா ஒன்றாக இருக்கும், கேரளா முன்னே செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

முதல் மாநிலம்

முதல் மாநிலம்

முதல் மாநிலமாக நாங்கள்தான் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். என்ஆர்சியை நாங்கள் எங்கள் மாநிலத்தில் கொண்டு வர மாட்டோம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் அனுமதிக்க மாட்டோம் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா எதில் எல்லாம் முதலில் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

என்ன நிவாரணம்

என்ன நிவாரணம்

மத்திய அரசு நிவாரணம் அளிக்காமல் இருந்ததை கலாய்க்கும் விதமாகவும், சிஏஏ எதிர்ப்பை டெல்லியில் ஒலிக்க செய்யும் விதமாகவும் கேரளா அரசு இப்படி செய்துள்ளது. முன்னதாக கேரளாவில் சிஏஏவை எதிர்த்து பலரது வீடுகளில் போஸ்டர் ஒட்டி இருந்தனர், சிஏஏவை ஆதரித்து பேசும் யாரும் எங்கள் வீட்டிற்குள் வர கூடாது என்று போஸ்டர் ஒட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala government sending a message to the Center government by advertising in Delhi news Papers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X