வேளாண் சட்டத்தை விவாதிக்க... சிறப்பு சட்டமன்ற கூட்டம்... கேரள அரசின் முடிவுக்கு கவர்னர் எதிர்ப்பு!
திருவனந்தபுரம்: வேளாண் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக கேரள அரசு நாளை கூட்டவிருந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்துக்கு அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில்.பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளன.சில மாநிலங்களில் உள்ள அரசும் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கூறி வருகின்றன. வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு செய்தது .
இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், டிசம்பர் 23 ஆம் தேதி சட்டசபையின் சிறப்பு அமர்வைக் கூட்ட ஆளுநருக்குப் பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, இந்த அமர்வு அழைக்கப்பட்டுள்ளதுஎனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு நாளை கூட்டவிருந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்துக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது சிறப்பு அமர்வைக் கூட்ட அவசரம் இல்லை என்று கூறி மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததாக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.சிறப்பு அமர்வைக் கூட்டுவதற்கு சரியான காரணங்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கும்படியும் கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசிடம் கேட்டு கொண்டதாகவும் தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications