“நான் இருக்கும்போது போராட்டம் நடத்துங்கள்".. ஆளுநர் ஆவேசம்.. கேரளாவில் உச்சம் எடுக்கும் மோதல்
திருவனந்தபுரம்: கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை எதிர்கொள்வதாக ஆளுநர் அறிவித்துள்ளார். இது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் இரண்டு ஊடகங்களை இந்த சந்திப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோதல்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகமதுகானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை தொடர்பாக மாநில அரசு சமீபத்தில் சட்டமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில், இனி மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் என்றும், ஆளுநர் இதில் தலையீடு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது. பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது அம்மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமித்து வருகிறது.

துணை வேந்தர்
ஆனால் கேரளாவில் இதற்கு ஆளுநர் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனையடுத்து மாநில அரசு நியமித்த அனைத்து துணை வேந்தர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் சட்டவிரோதமானது என அம்மாநில உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவு ஆளுநரின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது.

போராட்டம்
இந்நிலையில், இன்று கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் முதலமைச்சரை கடுமையாக சாடியுள்ளார். "நான் மோசமாக அச்சுறுத்தப்படுகிறேன். அவர்கள் அறிவித்துள்ள தர்ணா போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் நவம்பர் 15ம் தேதி நடத்த வேண்டாம். அன்று நான் ராஜ்பவனில் இருக்க மாட்டேன். எனவே, நான் இருக்கும் மற்றொரு நாளில் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சேனலுக்கு தடை
செய்தியாளர் சந்திப்பின் போது 'மீடியா ஒன்' மற்றும் 'கைராளி' என இரு செய்தி ஊடகங்கள் இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் வெளியேற வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார். கைராளி சேனல் ஆளும் சிபிஎம் கட்சிக்கு சொந்தமானதாகும். மீடியா ஒன் சேனல் பாதுகாப்பு அனுமதி பிரச்சனை தொடர்பாக மத்திய அரசிடமிருந்து தடையை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications