கேரளாவில் இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது.. பாஜக திடீர் பந்த்.. போக்குவரத்து பாதிப்பு, மக்கள் அவதி
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்த, ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டதையொட்டி கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய வேதி அமைப்பின் செயலாளர் கே.பி.சசிகலா என்ற 56 வயது பெண்மணி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.
அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சபரிமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, மரகூட்டம் என்ற பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1.40 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

144 தடையுத்தரவு
அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இந்து அமைப்பினர் நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலையை சுற்றிலும் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர்.

சசிகலா கைது
சசிகலா இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்மணி என்பதால், தடை உத்தரவை காரணம் காட்டி, கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய போலீசார், அவரை அனுமதிக்க மறுத்தனர். அதை மீறிச் செல்ல முற்பட்டபோதுதான் கைது செய்யப்பட்டார்.

அவசர பந்த்
இதையடுத்து காவல் நிலையத்திற்குள் சசிகலா உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அவசரமாக இன்று மாநிலம் தழுவிய அளவிலான பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை ஏற்று பல இடங்களிலும் கடையடைப்பு நடைபெறுகிறது. சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த சுமார் 2000 பேர் சசிகலா சிறை வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து கோழிக்கோடுக்கு சென்ற நான்கு கர்நாடக அரசு பேருந்துகள் வயனாடு பகுதியிலுள்ள சுல்தான் பத்தேரியில் தடுத்து நிறுத்தி கல்வீச்சுக்கு உள்ளாகின. இரவு வரை ஸ்ட்ரைக் அறிவிப்பு இல்லாமல் திடீரென அறிவித்ததால், பெங்களூர் பஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பஸ்கள்
பந்த் காரணமாக, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இரு மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்துகள், தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications