நிர்வாணத்தை செக்ஸுடன் இணைத்து பார்க்கக்கூடாது! கேரளாவின் ரெஹானா பாத்திமா வழக்கில் நீதிமன்றம் அதிரடி
திருவனந்தபுரம்: பிரபல சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா எனும் இளம்பெண் தனது குழந்தைகள் ஓவியம் வரைவதற்காக தன்னுடைய உடலையே அரை நிர்வாணமாக்கி கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ சர்ச்சையான நிலையில் அவர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
சர்ச்சைக்கு பெயர் எடுத்த ரெஹானா, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய சோஷியல் மீடியா அக்கவுன்ட்டிலிருந்து வீடியோ ஒன்றை அப்லோட் செய்திருந்தார். இந்த வீடியோதான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. காரணம், வீடியோவில் இவர் மேலாடையில்லாமல் அரை நிர்வாணமாக இருந்தார். மட்டுமல்லாது உடன் இவரது குழந்தைகளும் இருந்திருக்கின்றன. குழந்தைகள் ரெஹானாவின் உடலில் ஓவியத்தை வரைந்துள்ளன.

இந்த வீடியோவை 'உடல்-அரசியல்' என டைடல் போட்டு ஷேர் செய்திருந்தார். அவ்வளவுதான், வழக்கம்போல பல்வேறு அமைப்புகளும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரிசைக்கட்டி நின்றன. சிலர் ஒருபடி மேலே சென்று போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ரெஹாமான மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு 2020ம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ரெஹானா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் கல்வி மற்றும் உடல் மீதான புரிதல் குறித்து விளக்கவே ரெஹானா இப்படி செய்ததாக கூறியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன், இதெல்லாம் 4 சுவருக்குள் நடந்திருந்தால் பிரச்னையில்லை, ஆனால் இப்படி வீடியோவாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வியெழுப்பினார். மேலும், மனுஸ்மிருதி, புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் என்றும் கூறி முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இப்படி இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், ரெஹானா மேல்முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், "நிர்வாணம் என்பதை செக்ஸுடன் இணைத்து பார்க்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி கவுசர் எட்டப்பகத் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "தனிநபரின் உடல் மீதான சுயாட்சி உரிமைகள் இங்கு மறுக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இது தீவிரமாக மறுக்கப்படுகிறது. பெண்கள், தங்கள் உடல் மற்றும் வாழ்க்கை பற்றிய தேர்வுக்காக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த புகாரில் ரெஹானாவின் குழந்தைகள் பாலியல் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதராமும் கிடையாது. குழந்தைகள் ஓவியம் வரைய தன்னுடைய உடலை ரெஹானா கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். ஒரு பெண் தன் உடலைப் பற்றி தன்னாட்சி முடிவெடுக்கும் உரிமையானது, சமத்துவம் மற்றும் தனியுரிமைக்கான அவளது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருகிறது. அரசியலமைப்பின் 21 வது பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனிப்பட்ட சுதந்திரத்தின் எல்லைக்குள் வருகிறது.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நபரின் நிர்வாண மேல் உடலில் ஓவியம் வரைவதை வெளிப்படையான பாலியல் செயல்பாடாக கூற முடியாது. நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைத்து பார்ப்பது தவறு. நிர்வணத்தை ஆபாசமாகவும், ஒழுக்கக்கேடாகவும் வகைப்படுத்துதல் தவறு. இதே கேரளாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் உரிமைக்காக போராடியுள்ளனர். இன்றும் கோயில்களில் அரை நிர்வாண தெய்வ சிலைகள் இருக்கின்றன. இதனை ஆபாசமாக கருத முடியுமா?
ஆண்கள் மேலாடையின்றி இருப்பது ஒருபோதும் நிர்வாணமாக கருதப்படுவது கிடையாது. இதே பெண்கள் எனில் அதை நிர்வாணம் என்றும், ஆபாசம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மேலாடையின்றி உள்ள ஆண்கள் மீது எந்த வகையிலும் பாலியல் தாக்குதல்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால் இதே பெண்கள் எனில் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறாள். பாத்திமா ஷேர் செய்த வீடியோ, 'சமூகத்தில் நிலவும் இந்த இரட்டை நிலையை அம்பலப்படுத்துவதையே' நோக்கமாக கொண்டிருக்கிறது" என்று கூறி பாத்திமாவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications