திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா?".. 2வது காதலிக்காக கோர்ட்டுக்கு போன கேரள நபர்.. நீதிபதிகள் கோபம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது காதலியை மீட்டு தரக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து கண்டித்து அனுப்பி வைத்துள்ளது நீதிமன்றம்.

இளம்பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்திருந்த நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டிலிருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்தே இளைஞர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்த இளைஞரை கண்டித்து அபராதம் வித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

அஞ்சனா

அஞ்சனா

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஷமீர். இவர் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த அஞ்சனாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரின் வீட்டில் இந்த விஷயம் தெரியவில்லை. எனவே எந்த சிக்கலும் இல்லாமல் இருந்துள்ளனர். ஆனால் திடீரென ஒருநாள் இது அஞ்சனாவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர் அஞ்சனாவை அழைத்துக்கொண்டு அந்த ஊரை விட்டு வெறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டனர்.

அபராதம்

அபராதம்

இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த ஷமீர் அஞ்சனாவை பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அஞ்சனா கிடைக்கவில்லை. மொபைலும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக அவர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆட்கொணவு மனுவை ஷமீர் தாக்கல் செய்த நிலையில் மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மனுவை தீவிரமாக விசாரித்த நீதிபதிகள் மனுதாரான ஷமீர், தாக்கல் செய்த மனுவில் சில தகவல்களை மறைத்திருந்ததை கண்டுபிடித்து அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளனர்.

 விளக்கம்

விளக்கம்

ஷமீர் அப்படி என்ன தகவலை மறைத்தார் என்று கேட்கிறீர்களா? அதாவது ஷமீர் ஏற்கெனவே அஸ்வதி என்ற பெண்ணை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்துள்ளார். இந்த விவரங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடவில்லை. வழக்கு விசாரணையின்போது இந்த உண்மைகள் வெளியான நிலையில், ஏற்கெனவே திருமணமானவர் வேறு ஒரு பெண்ணை தனது காதலி என சொல்லிக்கொண்டு அவரை மீட்டுத் தர வேண்டும் என கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

திருமண வாழக்கை

திருமண வாழக்கை

பின்னர் இந்த விவரங்களை ஒப்புக்கொண்ட ஷமீர், தன்னுடைய திருமண வாழ்க்கை முற்றுப்பெற இருப்பதாகவும், அஸ்வதியிடமிருந்து விவாகரத்து கோரி இருப்பதாகவும் நீதிபதிகளிடம் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர், ஷமீருக்கு அபராதத்துடன் கண்டனமும் தெரிவித்து அனுப்பியுள்ளனர். தனக்கு திருமணமானதை மறைத்து காதலியை மீட்டு தர நீதிமன்றத்தை இளைஞர் ஒருவர் நாடியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A young man in Kerala had approached the High Court to recover his girlfriend and sent him away with a fine of Rs.25,000. Although he had been in love with the young woman for a long time, the girl did not consent to this love from home. Following this, the youth has approached the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X